மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கல்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 555 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி தலா ரூ.1,05,000/- வீதம் ரூ.4,20,000 மதிப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வழங்கினார்.