முன்மாதிரி பத்திரிகையாளர்
ஊடகவியல் தொடர்பான விமர்சன ஆய்வில் நோம் சாம்ஸ்கிக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவர் செய்மோர் ஹெர்ஸ். இயல்பில் அவர் சுயாதீன ஊடகர். கொஞ்சகாலம் நியூயார்க் டைம்ஸ், நியூயார்க்கர் போன்றவற்றில் எழுதினாலும் இப்போது அவர் சப்ஸ்டாக் போன்ற சமூக ஊடகம் நோக்கி நகர்ந்துவிட்டார்.
அமெரிக்க அதிகார வர்க்க இயந்தி ரம், கார்ப்பரேட்டுகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் போன்றவை குறித்து மேலே கண்ட பத்திரிகைகள் பேசுவதில்லை. கார ணம், இவற்றின் பகுதிகளாகவே ஊட கங்களும் ஆகிவிட்டன. சோம்ஸ்கி தான் எழுதியதற்காக கொலை அச்சுறுத்தலுக்கு ஆளான தில்லை. ஆனால் செய்மோர் ஹெர்ஸ் கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார். அரசே அவரை பயங்கரவாத ஆதரவா ளர் என மிரட்டுகிறது. வியத்நாம் மைலாய்ப் படுகொலை கள், வாட்டர்கேட் ஊழல், இராக் அபு காரிப் சிறைச் சித்திரவதைகள், இன்றைய காசா இனப்படுகொலையில் அமெரிக்கா வின் பங்கு போன்றவற்றை விசாரித்து, பயணம் செய்து, ஆய்வு செய்து உலகின் முன்பு அம்பலப்படுத்தியவர் அவர். அவர் தனது அனுபவங்களைத் தன் வரலாறாக (Reporter : A Memoir) எழுதி யிருக்கிறார். இருபது ஆண்டுகளாக அவர் குறித்த ஆவணப்படம் செய்ய விரும்பியவருக்கு இருபது ஆண்டுகளின் பின் ஒப்புதல ளித்து இப்போது ‘கவர் அப்(Cover-Up)’ எனும் பெயரில் அந்த ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. நெட்பிளிக்சில் இருக்கிறது. இந்தக் குறிப்பை எழுத நேரக் கார ணங்கள் சில உண்டு. இடையிடையில் அவர் ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் தயாரிப்பை நிறுத்திவிடலாம் என்கிறார். ஏன் தனக்கான ஆதார ஆவணங்கள் தந்த வர்களைக் காட்டித் தர அவர் விரும்ப வில்லை? அமெரிக்க அரசின் மனித உரிமை மீறல்களை அவரால் ஒப்பமுடிய வில்லை. அவருக்கு கொலை மிரட்டல் வந்த ஒரு தருணத்தில் அவரது மக னுக்கு இரண்டு வயது. அவர் தனது காதல் மனைவியை உருகியுருகி நேசிப்ப வர். அவர் மனைவியிடம் சென்று தனது அச்சத்தை வெளியிட்டு அழுகிறார். மனைவி உங்கள் பணியை அச்சமின்றித் தொடருங்கள். பிறவற்றை நான் பார்த்துக் கொள்வேன் என்கிறார். சலவைச் சாலை வைத்திருந்த தனது தந்தையை, தனது கீழ் நடுத்தர வர்க்க வாழ்வை அவர் நினைவுகூர்கிறார். யதேச் சையாகத் தான் கல்லூரி சென்றதையும் பத்திரிகையாளராக ஆனதையும் அவர் நினைவுகூர்கிறார். தகவல், ஊடகவியல் சார்ந்து உலகை மாற்றிய நோம் சாம்ஸ்கி, ஆரோன் ஸ்வார்ட்ஸ், எட்வர்டு ஸ்நோடவுன், ஜூலி யன் அசாஞ்சே போன்றவர்களின் முன்னோடியாகத் திகழ்பவர் செய்மோர் ஹெர்ஸ். இத்தகையவர்களால்தான் நாம் வாழும் உலகு ஓரளவாவது இன்றும் ஈரத்துடன் இருக்கிறது.
