ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கேஸ் தட்டுப்பாடு போக்க ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஞாயிறன்று (மார்ச் 15) மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், துணைமேயர் மகேஷ்குமார், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின் உள்ளிட்டோர் பேசினர்.
