tamilnadu

img

திருச்சி விரைவு செய்திகள்

செந்துறையில் மதுவிலக்குத் துறை விழிப்புணர்வு பேரணி

அரியலூர், ஏப்.9 - அரியலூர் மாவட்டம், செந்துறையில் மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாரா யத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, முருகன்,  செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசி ரியர் செல்வவிநாயகம் ஆகியோர் பேரணியை கொடிய சைத்து தொடக்கி வைத்தனர். பேரணியானது, கடைவீதி, உடையார்பாளையம் சாலை, தீமிதித் திடல் வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றிய பொருளாளர் அ.சங்கர்-இளமதி இல்லத் திருமண விழா பேரளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு ரஜினிகாந்த், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ.முகமதுஉதுமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன், பேரளம் நகரச் செயலாளர் ஜி.செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.இப்ராஹிம்சேட், தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் மணமக்கள் எஸ்.நன்மாறன் - டி.வேல்விழியை வாழ்த்தினர்.

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

கடலில் பலத்தக் காற்று வீசுவதால் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 10 வியாழன் முதல் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தி லும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தி லும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் தேதி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது.

தோவாளையில் பாரம்பரிய நெல் வகைகள் கண்காட்சி 

குமரி மாவட்டம், தோவாளை வட்டாரத்தில்   கடுக்கரை பகுதியில்,பாரம்பரிய நெல் வகைகள் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்கள் குறித்து  விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள்  கண்காட்சி நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், கிள் ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள்  கடுக்கரை  சுற்று வட்டார பகுதியில் கிராமப்புற வேளாண் களப் பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர். காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, நவரா மற்றும் கருங்குருவாய் போன்ற சில பாரம்பரிய அரிசி வகைகள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன,அவை மனித நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டவை. எனவே  பாரம்பரிய நெல் வகைகளான  கொட்டாரம் சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, செறுசிட்டான், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, தங்க சம்பா ஆகியவை அவல் களாக மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை    “ மேன்மை” மதிப்புக்கூட்டுப் பொருள் அங்காடியில் பெற்று கண்காட்சியில் விவசாயிகளுக்கு, வேளாண் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றிய விழிப்புணர்வும் அதன் மதிப்புக்கூட்டுப் பொருள் பற்றின விழிப்புணர்வும் அளித்தனர் கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிரியர்கள் காளிராஜன், பாஸ்கர், மீனாட்சி ஆகியோர் மாணவர் களை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

காவல் ஆய்வாளர்கள் 9 பேர் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 9 காவல்  ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து  மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு: விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்.நம்பிராஜன், சேத்  தூருக்கும், வச்சக்காரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆர்.பொன்  மீனா, மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கும்,  அங்கு பணிபுரிந்த என்.மீனா, விருது நகர் அனைத்து மகளிர் காவல்நிலை யத்திற்கும், அங்கு பணிபுரிந்த ஆர்.கீதா,  வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கும், நெல்லை மாவட்டத்தில் சிறப்பு பிரி வில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் சி. ராஜேஷ், இராஜபாளையம் தெற்கு காவல்  நிலையத்திற்கும், அங்கு பணிபுரிந்த ஏ. செல்வி, விருதுநகர் மேற்கு காவல் நிலைய குற்றப் பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் பணிபுரிந்த எம்.சந்திரன், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலை யத்தில் பணிபுரிந்த எல்.முத்துலட்சுமி, சிவ காசி கிழக்கு காவல்நிலையத்திற்கும், வெம்பக்கோட்டையில் பணிபுரிந்த பி.சங்கர், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

வீட்டிற்குள் பதுங்கிய நல்ல பாம்பு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேலாயுதம் பிள்ளை. இவரது வீட்டு சமையல் அறையில் நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று  சமையல் எரிவாயு சிலிண்டரில் சுருண்டு பதுங்கியிருந்தது. இதனைப் பார்த்த அவரு டைய மகன் மங்கபெருமாள், கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பனுக்கு தகவல் கொடுத்தார்.  இதுகுறித்து அவர் மாவட்ட வன அலுவலருக்கு தெரிவித்தார்.  ஆரல்வாய்மொழி வனக் காவலர் தனுஷ் உடனடியாக வந்து சமையல் அறையில் பதுங்கியிருந்த நல்ல  பாம்பை பிடித்து ஆரல்வாய்மொழியில் உள்ள அடர்ந்த  வனப்பகுதிக்கு கொண்டுவிட்டார்.