விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனை விரைவில் தீர்வு
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு
திருப்பூர், கோவை மாவட்டங்க ளில் நடைபெற்று வரும் விசைத்தறி யாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, விரைவில் பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், விசைத்தறியாளர்கள் 2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும்; புதிய கூலி உயர்வு ஒப் பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கடந்த மார்ச் 19-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் 11 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆத ரவாக கோவை மாவட்டம் சோமனூர், கண்ணம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம், பல்லடம் உள்ளிட்ட பகு திகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இரு மாவட்டங்களிலும் 1.25 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையா ளர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் காரணமாக தினமும் 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி தடைபட்டு வருவதாகவும், கடந்த 25 நாட்களில் ரூ. 1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (ஏப்.17) கேள்வி நேரம் முடிந்ததும் இந்த விவகாரம் எதிரொலித்தது. எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஜெ. ஜெ. பிரின்ஸ் (காங்), கோ.க. மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜக), டி. ராமச்சந்திரன் (சிபிஐ), எம். சின்னதுரை (சிபிஎம்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல் முருகன் (தவாக) ஆகியோர் பேசினர். “கூலி குறைக்கப்பட்டதால் தீவி ரம் அடைந்திருக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர். விரைந்து தீர்வு காண வேண்டும்: சிபிஎம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர் எம். சின்னதுரை பேசுகையில், “பத்தாண்டுகளுக்கு முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை யில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்தாமல், கூலி குறைக் கப்பட்டதால் விசைத்தறித் தொழிலா ளர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக் கின்றனர். இந்நிலையில், அரசு நிர்வாகமும் தங்களின் போராட்டத் தைக் கண்டு கொள்ளவில்லை என்று வேதனைப்படுகிறார்கள்” என்றார். அப்போது, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் குறுக்கிட்டு, “விசைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வர வேண்டும் என்ப தற்காகத் தான் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் நானும் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினோம். விரைவில் சுமூக தீர்வு ஏற்படும்” என்றார். தொடர்ந்து பேசிய எம். சின்ன துரை எம்எல்ஏ, “கோவை, திருப்பூர் மிக முக்கியமான தொழில் நகரங் கள். ஜவுளி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் இந்த மாவட்டங்களில் தற்போது நடந்துவரும் போராட்டத் தால் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த பிரச்சனை மாநிலம் முழுவ தும் பேசுபொருளாக மாறியுள்ளது. எனவே, விசைத்தறி தொழிலாளர்க ளின் கோரிக்கைகள் மீது அரசு தலை யிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தி ற்கு பதிலளித்து பேசிய கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி, “திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 19 - போராட்டம் தொடங்கிய நாளிலி ருந்து அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை விரிவாக விளக்கி னார். மேலும் மாவட்ட ஆட்சியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரி கள், கைத்தறித் துறை இயக்குநர் மற்றும் விசைத்தறி உரிமையாளர் கள் சங்க நிர்வாகிகளுடன் ஏப்ரல் 11 அன்று நடத்திய சமரசக் கூட்டத்தில் 28 சதவிகிதம் கூலி உயர்வு கேட்ட நிலையில் 5 சதவிகிதம் மட்டுமே கூலி உயர்வு கொடுக்க முடியும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்து சென்றவர்கள் இதுவரைக்கும் தங்க ளது நிலைப்பாட்டை அறிவிக்க வில்லை”என்றார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “விசைத்தறி உரிமை யாளர்கள் நடத்திய போராட்டத் தின் தீவிரத்தை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. இது சட்டப்பேரவை யிலும் எதிரொலித்துள்ளது. இத னால், பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று முதலமைச்சரும் அறிவு றுத்தியுள்ளார். எனவே, அரசு இந்த பிரச்சனையை முழு கவனத்துடன் கையாண்டு வருகிறது. மிக விரை வில் பிரச்சனை தீர்க்கப்படும்” என்றார். அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பேசுகையில், “விசைத்தறி நெசவா ளர்கள் கோரிக்கையை ஏற்று 750 முதல் 1000 யூனிட் வரைக்கும் மின் கட்டண சலுகை வழங்கப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 63 ஆயிரம் நெசவாளர்கள் முழுமையாக பயன டைந்துள்ளனர். சுமார் 36 ஆயிரம் நெசவாளர்கள் மட்டுமே மின் கட்ட ணம் செலுத்தி இருக்கின்றனர். மின் கட்டணத்திற்கு மானியமாக ரூ. 571 கோடியை அரசு வழங்கியிருக்கிறது. அந்த வகையில், விசைத்தறி நெச வாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பினரையும் அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்துவோம்” என்றார்.