tamilnadu

img

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கரம் கோர்த்த அரசியல் கட்சிகள்

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கரம் கோர்த்த அரசியல் கட்சிகள்

மதுரை மதநல்லிணக்க மக்கள்  கூட்டமைப்பு சார்பில் மத நல்லி ணக்க மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சி ஞாயிறன்று கே.கே.நகர்,  கிருஷ்ணய்யர் மகாலில் வழக்கறி ஞர் சே.வாஞ்சிநாதன் தலைமை யில் நடைபெற்றது. வழக்கறி ஞர் ஹென்றி திபேன் நோக்க உரை யாற்றினார், மீ.த.பாண்டியன் தொடக்க உரையாற்றினார். பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்கள் மற்றும் சமூக செயல் பாட்டாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விசிக தலை வர் தொல்.திருமாவளவன் எம்.பி.,  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் சு.வெங்கடேசன் எம்.பி., ம.தி. மு.க மாநிலப் பொருளாளர் செந்தி லதிபன், மக்கள் விடுதலைக் கட்சி  தலைவர் சு.க.முருகவேல் ராசன்,  அ.தி.ம.மு.க தலைவர் பசும்பொன்  பாண்டியன், தமிழ் புலிகள் தலை வர் நாகை.திருவள்ளுவன், பேரா சிரியர் இரா.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆன்மீகத் தலைவர்கள் சித்தர்  மூங்கிலடியார், சமைப்பர் ஆதினம்,  மதுரை மாவட்ட அரசு காஜியார் சபூர் முஹ்யத்தீன் மிஸ்பாயி, பல் சமய உரையாடல் பணிக்குழு, தமி ழக ஆயர் பேரவை தலைவர் பேந்த்  ஆயர். லாரன்ஸ் பயஸ் உள்ளிட்ட  பல்வேறு சமூக நல அமைப்புகளின்  பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கேற் றனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், சட்டமன்ற உறுப்பி னர் மு. பூமிநாதன் மற்றும் பல்வேறு  மக்கள் நல இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இந்த மாநாட்  டில் கலந்து கொண்டனர். “மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம்” - சு. வெங்கடேசன் எம்பி மாநாட்டில் சிபிஎம் எம்பி சு.  வெங்கடேசன் உரையாற்றுகை யில், “பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த மத நல்லிணக்க மாநாடு நடைபெறுகிறது. முத லில் திருப்பரங்குன்றம் பிரச்சனை  ஆரம்பித்ததிலிருந்து நீதிமன்றத்தி லும், மக்கள் மன்றங்களிலும் மூத்த  வழக்கறிஞர் ஹென்றி தீபன், வழக்  கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் போராடி வருகிறார்கள் அவர்  களுக்கு நன்றியையும் வாழ்த்துக் களையும் தெரிவிக்கிறேன்,” என் றார். அவர் மேலும் தொடர்ந்து, “ஆர்.எஸ்.எஸ். பத்து தளங்களில் 20 கரங்களில் வேலை பார்க்கின் றது. நாம் எண்ணிலற்ற தளங்களில்  எண்ணிலடங்கா கரங்களில் வேலை செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற முறையில் திருப்ப ரங்குன்றம் பிரச்சனையில் இப்  பொழுது மட்டுமல்ல 30 ஆண்டு களாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம்,” என்று குறிப்பிட் டார். “1990களில் தீபம் ஏற்றுவதில் இந்துமுன்னணியினர் பிரச்சனை யை ஆரம்பித்தார்கள். அப்போது தவத்திரு குன்றக்குடி அடிகளார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து ‘வெங்கடேசா மத நல்லி ணக்கத்திற்காக நீ நாடகம் போடு அதில் நான் வந்து நடிக்கிறேன்’  என்றார். அப்போது நாங்கள் வெற்றி பெற்றோம். இன்று மீண்டும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள் பிரச்சனைகளை உருவாக்க முயல்கின்றன,” என்றார். “திடீரென்று திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என்று கிளம்புகிறார்கள். போன மாதம் அழகர் மலையை அழிக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நடத்தி யவர்கள் தான் இந்த பாஜக  வினர். இந்த மாதம் திருப்பரங்  குன்றம் மலையை பாதுகாக்க போகிறோம் என்று கிளம்பு கிறார்கள். எல்லாமும் ஏமாற்று வேலை,” என்றார். “சிக்கந்தர் மலையில் தர்கா உருவாகி சில நூறாண்டுகள் ஆகின்றது. சைவம் என்ற ஒரு மதம் உருவாகி 1500 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் இந்த  மலைக்கு பரங்குன்றம் என  பெயர் உருவாகி 4000 ஆண்டுகள்  ஆகிறது. இந்த மண்ணில் மதங்க ளைவிட மொழிதான் வலிமையா னது. தமிழே நீக்கமற நிறைந்தது,” என்று வலியுறுத்தினார். வெங்கடேசன் மேலும், “நாங்  கள் இந்த சமூகத்தில் அமைதி யை நல்லிணக்கத்தையும் காத்து நிற்பவர்கள். அதனால்தான் இவ்வ ளவு பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்கின்றோம். காவடி எடுத்தால் கந்தனுக்கு கேட்கப் போகிறது கந்தூரி விழா எடுத்தால் சிக்கந்தருக்கு கேட்க போகிறது. இதில் நடுவில் நுழைய நீ யார்? அவரவர் வழிபாட்டு பழக்க வழக்  கங்கள் அவரவருடைய நம்பிக்கை.  யாக குண்டமா, தொழுகையா, பிரார்த்தனையா, படையலிடுவதா, பலி கொடுப்பதா, என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கை மற்றும் உரிமை சார்ந்தது. இதில் தலை யிட பாஜக, ஆர் எஸ் எஸ் க்கு என்ன  உரிமை உள்ளது?” என்று கேள்வி  எழுப்பினார். “மத நல்லிணக்கத்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்க முடியும்” - தொல்.திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவள வன் பேசுகையில், “திருப்பரங் குன்றம் மலை தர்கா வழிபாடு விவ காரத்தைப் பொறுத்தவரை திமுக அரசுதானே காரணமாக இருக்க முடியும் என நாம் பொதுவாக மேலோட்டமாக பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு ஆட்சியிலும் அரசுக்கு ஆதரவாகவும் எதிராக வும் செயல்படக்கூடிய அதிகார  வர்க்கம் உண்டு. ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் அமைப்பு களின் சாதுரியமே, அதிகாரத்தில் சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள நபர்களை தொடர்ந்து சந்தித்து, அவர்களை தங்களின்  ஆதரவாளர்களாக மாற்றுவது தான்,” என்றார். “ஆர்எஸ்எஸ்காரர்கள் யாரும்  தங்களது முகத்தை வெளியே  காட்டமாட்டார்கள். சுவரொட்டி களோ, துண்டறிக்கைகளோ வெளியிட மாட்டார்கள். மேடை யில் அமர்வதற்கு ஆசைப்பட மாட்டார்கள். இந்தியா முழுவதும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் திருமணம் செய்து கொள் ளாமலேயே 24 மணி நேரமும் இந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டார். “அரசின் அனைத்துத் துறை களிலும் இவர்களுக்கான ஆதர வாளர்கள் இருப்பார்கள். இவர் களையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ்ஆக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்  குள் அவர்களிடம் சங்பரிவார் களாக இருப்பார்கள். மத நல்லி ணக்கத்தைப் பாதுகாப்பதன் மூலமே சட்டம் ஒழுங்கைப் பாது காக்க முடியும்” என வலியுறுத்தி னார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டில் ஐந்து முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன: திருப்பரங்குன்றம் தொல் முருக வழிபாடு உட்பட நாட்டார்  தெய்வ வழிபாடு, சமணம், கொற்  றவை, சைவம், இஸ்லாம், இந்து  என ஏழு வழிபாட்டு முறைகள்  உள்ளதால் இதன் பன்மைத்து வத்தை பாதுகாப்பதற்காக மத நல்லிணக்க மலை என தமிழக அரசு  அறிவிக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பரங்குன்றம் மலை வழிபாடு குறித்த தீர்ப்பினை ராம் ஐயர் என்ற நீதிபதி வழங்கியதையும் மீறி, கோவிலுக்குள் புகுந்து கல வரம் செய்த கட்சிகள், அமைப்பு கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உறுதிமொழி யை மீறிய நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்  ஆய்வாளர், இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். வழிபாட்டு உரிமையை பாது காக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.