tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம்! மதுரையில் அரசியல் கட்சிகள் - அனைத்து சமய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை, பிப்.16- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்று மதுரையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து சமய தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்ரவரி 16 அன்று தோழமைக் கட்சித் தலை வர்கள், அனைத்து சமயத் தலைவர்கள், பல் வேறு இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்பு டன் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: நம்முடைய இந்திய திருநாட்டின் மதச்சார் பற்ற அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு எதி ராக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடா ளுமன்றத்தில் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு நிறைவேற்றியுள்ளது. பாசிச ஹிட்லர் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு நிறைவேற்றப் பட்டுள்ள இந்தச் சட்டம் மக்களை மதத்தின் அடிப்படையில் அடையாளம் கண்டு பிரிக்கி றது. இது மக்கள் ஒற்றுமைக்கும் மத நல்லி ணக்கத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் முற்றிலும் எதிரான ஒன்றா கும்.  குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தேசிய மக்கள் பதிவேடு(என்பிஆர்) மற்றும் இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மூன்று முனை கொண்ட திரிசூலம் போன்றவை ஆகும். வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு போலன்றி, தற்போது நடத்தப்பட உள்ள தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்களுக்கான பதிவேட்டிற்கான முன்னோட்டமாகும். எனவே, மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கான எந்தவொரு தக வல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று அனைத்துப் பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.  சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மட்டு மின்றி, மதச்சார்பின்மையை நேசிக்கிற அனைத்துப் பகுதி மக்களும் நாடு முழுவதும் இந்த அக்கிரமமான சட்டத்திற்கு எதிராக சினர்ந் தெழுந்து, போராடி வருகின்றனர். ஆனால், இதை ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே போராடுவது போன்று சிறுமைப்படுத்த முயல்கிறது மோடி அரசு. குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், அனைத்துப் பகுதி மக்களும் குறிப்பாக ஏழை, எளிய விளிம்பு நிலை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.  கேரள மாநில சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முதன்முறையாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 13 மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத் தித்திற்கு எதிராக இதுவரை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதி ராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்ட மன்றத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறோம்.  தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தினந்தோறும் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அதிமுக அரசு, இந்தப் போராட்டங்களை அடக்கு முறை மூலம் ஒடுக்க முயல்கிறது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை களில் ஒன்றான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை ஆகியவை காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. போராட்டங்களுக்கு மட்டு மின்றி சாதாரண கூட்டங்களுக்கும் பல்வேறு கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் காவல்துறை மூலம் தரப்படுகிறது. பொய் வழக்குகள் புனையப்படுகின்றன.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அறவழியில் அமைதியாக போராடிய மக்கள் மீது தமிழக காவல்துறை கொடூரமான தாக்கு தலை தொடுத்துள்ளது. பெண்கள், குழந்தை களும் தாக்கப்பட்டுள்ளனர். முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளார். போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழு வதும் தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முழுமையான ஆத ரவை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த போராட்டங்களுக்கு துணை நிற்போம். பாஜக தலைவர்கள் ஒன்றுபட்ட இந்தப் போராட்டங்களை திசை திருப்பும் வகையிலும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகை யிலும் மக்கள் ஒற்றுமையை கெடுக்கும் நோக்கிலும் வெளியிட்டு வரும் விஷமத்தன மான விஷக் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம். அமைதியை சீர்குலைக்க முய லும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தேசபக்த யுத்தம். இந்த கொடூர மான சட்டம் திரும்பப் பெறப்படும் வரை அய ராது அறவழியில் போராட உறுதியேற்போம்.