பெண்களின் வீட்டு பங்களிப்பை வலியுறுத்தும் அணுகுமுறைகளும் கொள்கைகளும் நடைமுறையில் உள்ள மனுவாத கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். குடும்ப வன்முறை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது நேரடி கவலைக்குரிய விஷயமாகும். சமீபத்திய என் சி ஆர் பி அறிக்கையின்படி, ஒரே ஆண்டில் (2022) 6,517 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. 2014 முதல் 2022 வரையிலான வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கையை கூட்டினால், அது 65,633 மரணங்கள் என்ற அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையாகும். இது சுதந்திர இந்தியா சந்தித்த போர்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்த இளம் பெண்கள் யார்? மத ரீதியாக, இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் தான். - பிருந்தா காரத்