tamilnadu

சிஐடியு தலைவருக்கு கொலை மிரட்டல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிஐடியு தலைவருக்கு கொலை மிரட்டல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக. 4-   சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை, காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் கே.அன்பு (54). இவரது வீடு, தஞ்சாவூர் கீழவாசல் காவடிக்காரத் தெரு பகுதியில் அமைந்துள்ளது. இதே  பகுதியில், தனியார் நிறுவனத்தின் தின்பண்டம் தயாரிப்புக்கூடம் அமைந்துள்ளது. இங்கு தின்பண்டம் தயாரிக்கும் பொழுது அடுப்பில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் தூசிகள் தெருவில் அனைத்து வீடுகளிலும் பரவி, பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதுகுறித்து, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, உணவுப் பாதுகாப்புத் துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியை பார்வை யிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பி இருந்தார்.  இந்நிலையில், தின்பண்டம் தயாரிப்பு கூடம் அமைத்துள்ள தனி யார் நிறுவனத்தின் உரிமையாளர் மருது என்பவர், இரண்டு இருசக்கர வாகனத்தில் ரவுடிகள் நான்கு பேருடன் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஜூலை 31 ஆம் தேதி மாலை, கே. அன்புவின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியிடம் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கே.அன்பு, தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார்  தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசார ணை மேற்கொண்டு, கீழவாசல் பகுதி யைச் சேர்ந்த வெங்கடேஷ் (30), அருண் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ள னர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கூறுகை யில், “சிஐடியு மாவட்ட துணைச்  செயலாளர் கே.அன்பு, பொதுமக்கள் பிரச்சனை, ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக வும், தொழிலாளர் நலனுக்காகவும், சிஐடியு சார்பில், பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வரும் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார். அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த,  மருது உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். எதிர்வரும் காலங் களில், இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருப்பதற்கு காவல்துறை முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள் ளார்.