கவிஞர் நந்தலாலா நினைவேந்தல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான, மறைந்த கவிஞர் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிஞர் இராசு கவிதைப்பித்தன், கவிஞர் நந்தலாலாவின் படத்தைத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எழுத்தாளர் நா. முத்துநிலவன், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜீவி, தனிக்கொடி, மாவட்டச் செயலர் ஸ்டாலின் சரவணன், புதுக்கோட்டை மாமன்ற உறுப்பினர் செந்தாரமரை பாலு, அபெகா அமைப்பின் நிர்வாகி டாக்டர் ஜெயராமன், வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன், இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி, தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் சு.மதியழகன், பொருளாளர் மு.கீதா உள்ளிட்டோர் பேசினர்.