மதுரை, ஜூன் 23- பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து செவ்வாயன்று மதுரை, ஆயக்குடி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை பழங்காநத்தத்தில் ஆட்டோ தொழிலா ளர்கள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்டத் தலைவர் மா. கணேசன், ஆட்டோ சங்க மாவட்டத் துணைத் தலைவர் கா.இங்கோவன், குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மதுரை அரசுப் போக்குவரத்து அலுவலகம் முன் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் என்.கனகவேல், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இ. உதய நாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எம்.அழகர்ராஜ், இரா. லெனின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை
காரைக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்க்கு ஆட்டோ தொழிலாளர் சங்கம்- சாலைப் போக்கு வரத்து சங்க நகர் செயலாளர் வெங்கட், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் தெட்சிணா மூர்த்தி, சந்திரன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவகங்கையில் சிஐடியு மாவட்டத்தலைவர் உமாநாத், மாவட்டச் செயலாளர் ஆர்.வீரையா, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் விஜய்குயார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சின்னாளபட்டியில் மாவட்டத் தலைவர் ஆர்.பால்ராஜ், சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நத்தம் செந்துறை பகுதியில் சிஐடியு ஒன்றியப் பொறுப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலா ளர்கள் கலந்துகொண்டனர். ஆயக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தேனி பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம், அல்லிநகரம், அரண்மனைப்புதூர், பழனி செட்டிபட்டி, வாரச்சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டச் செய லாளர் டி.வெங்கடேசன்,தாலுகா செயலாளர் சி.சடை யாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கம்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரியா செயலாளர் ஜிஎம் நாகராஜன், கே.ஆர். லெனின், எஸ். பன்னீர்வேல், ஐ.பாலகுருநாதன், செந்தில், அப்பாஸ் மந்திரி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரி யாக்குழு உறுப்பினர் பி.ஜெயன், மொக்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் சிலை, பேருந்து நிலையம் ,ஜக்கம்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . சின்னமனூரில் கிராம சாவடி, ரவுண்டானா ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏவி.அண்ணா மலை, எஸ்.பொம்மையன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . போடி தேவர் சிலை, வஉசிசிலை,கட்டபொம்மன் சிலை ,வள்ளுவர் சிலை போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எல்.ஆர்.சங்கரசுப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . கடமலைக்குண்டு கிராமத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைப் கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தயாளன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் போஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
திருவில்லிபுத்தூர் நகரில் பத்து மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை, வீர சதானந்தம், மரியடேவிட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திரு வில்லிபுத்தூர் ஒன்றியத்தில் நான்கு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் திருமலை, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், இராஜபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, திவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பூங்காவனம், பூமாலை ராஜா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் இராஜ பாளையத்தில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிஐடியு நகர் கன்வீனர் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம் பலர் கலந்துகொண்டனர்.
இராஜபாளையம் ஒன்றியம் சார்பில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் நடை பெற்றது ஆர்ப்பாட்டத்தில் ராமர், சந்தனகுமார், நீராத்த லிங்கம், சபரி உட்பட பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செய லாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஜி.வேலுச்சாமி, பி.ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிர மணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என் தேவா, மாவட்டத் தலை வர் எம்.மகாலட்சுமி, சாலை போக்குவரத்து சங்க செயலாளர் எம் திருமலை, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் மகேந்திர குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.