tamilnadu

‘முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் மணிப்பூர் மக்கள்’

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும்  வன்முறை தீவிரமடைந்து வரு கிறது. ஒன்றிய அரசு படை களை குவித்துள்ளதால் அங்கு பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்,”வன்முறைச் சம்ப வங்களால் மணிப்பூர் மக்கள் முற்றி லும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ள னர்” என தேவாலயங்களின் தேசிய  கவுன்சில் (NCCI) குற்றம் சாட்டியுள்  ளது. இதுதொடர்பாக என்சிசிஐ பொதுச்  செயலாளர் அசிர் எபினேசர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூ ரில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக வன்  முறை நீடித்து வருகிறது. மணிப்பூரில்  வன்முறைச் சம்பவங்கள் தளர்வ தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாநிலம் முழுவதும் துன்பம், உயிரி ழப்பு மற்றும் இடப்பெயர்வு ஆகிய வற்றால் வகைப்படுத்தப்படும் இந்த  வன்முறை சம்பவங்கள், கட்டுப் பாட்டை மீறி தொடர்ந்து சுழல்கிறது.  இதனால் மணிப்பூர் மக்கள் விரக்தி யில் உள்ளனர். இயல்புநிலையில் வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்  துள்ளனர். துண்டாடப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின்  ஒவ்வொரு குடும்பமும் துண்டாடப்பட்  டுள்ளன. சமூகங்கள் சொந்த மாநி லத்திலேயே இடம்பெயர்ந்து வாழ்ந்து  வருகின்றனர். குழந்தைகள் கல்வி யை இழந்துள்ளனர். அதே போல  உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளில் மிகுந்த பற்றாக்குறைஉள்ளது. இது மணிப்பூர் மக்களின் துன்பத்தை மேலும் மோசமாக்குகிறது. குளிர் காலம் நெருங்கி வருவதால் இடம் பெயர்ந்து தவிக்கும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், முதியவர் கள் மற்றும் சிறப்புத் தேவைகள்  உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.  மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய,  மாநில அரசுகள் செயல்பட வேண்டிய  நேரம் இது. வன்முறையை முடிவுக்  குக் கொண்டுவருவது மட்டுமல்லா மல், மணிப்பூர் சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் நம்பிக்கையை யும் மீட்டெடுக்க உடனடியாகத் தலை யிடுமாறு இந்தியக் குடியரசுத் தலை வர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்  சரிடம் கேட்டுக்கொள்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாலயங்களின் தேசிய கவுன்  சில் என்பது நாட்டில் 1.4 கோடி இந்  திய கிறிஸ்தவர்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் அமைப்பாகும்.