tamilnadu

img

தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தால் நாடாளுமன்றம் முடங்கியது!

தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தால் நாடாளுமன்றம் முடங்கியது!

சூழ்ச்சியான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு’

தொகுதி மறுவரையறை விவகா ரத்தை எழுப்பி தமிழக எம்.பி.க்கள் நடத்திய போராட்டம் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவை களும் நாள் முழுவதும் முடங்கின. மக்கள் தொகை அடிப்படையி லான தொகுதி மறுவரையறை (Delimitation) எனும் சூழ்ச்சியைக் கைவிட வேண்டும்; குடும்பக் கட்டுப் பாட்டை சிறப்பாகக் கடைப்பிடித்து  மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்  டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளம்  போன்ற மாநிலங்களை வஞ்சிக்கக் கூடாது; தொகுதி மறுசீரமைப்பை நியாயமான வகையில் மேற் கொள்ள வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக பல முறை நோட்டீஸ் அளித்தும், விவா தத்திற்கே மோடி அரசு தயாராக இல்  லாததால், நாடாளுமன்ற வளா கத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

இதில், தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், வியாழனன்று காலை இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது,  “நியாயமான தொகுதி மறுவரை யறை (FairDelimitation) வேண் டும்”; “தமிழ்நாடு போராடும்; தமிழ் நாடு வெல்லும்” (‘Tamil Nadu will  fight, Tamil Nadu will win) எனும் வாசகங்கள்  பொறிக்கப்பட்ட டி-சர்ட்டையும் தமிழக எம்.பி.க்கள் அணிந்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து,  அதே டி-சர்ட்டுடன் நாடாளுமன்றத் திற்கும் சென்றனர். அப்போது, சபா நாயகர் ஓம் பிர்லா, தமிழக எம்.பி.க்  களின் வாசகங்கள் எழுதப்பட்ட  டி-ஷர்ட்கள், நாடாளுமன்ற விதி களுக்கு எதிரானது என்று கூறினார். “அவையின் கண்ணியத்தையும் மரி யாதையையும் பராமரிக்க வேண் டும். கண்ணியம் மீறப்படுவதை ஏற் றுக்கொள்ள முடியாதது; வெளியே சென்று, உங்கள் உடைகளை மாற்  றிக்கொண்டு, சரியான உடையுடன் திரும்பி வாருங்கள்” என்று கூறினார்.  

நண்பகல் 12 மணி வரை. அவையை  ஒத்திவைத்தார். இருப்பினும் 12 மணிக்கு, தமிழக  எம்.பி.க்கள் மீண்டும் அதே உடை யில் திரும்பினர். தொகுதி மறுவரை யறை விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என்று தொடர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர். “மக்  கள் தொகை கணக்கெடுப்பு இன்னும்  நடத்தப்படாததால் தொகுதி மறு வரையறை குறித்து விவாதிக்க வேண்டிய அவசரம் தற்போது இல்லை” என்று சபாநாயகர் கூறவே  மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால்,  மக்களவை மீண்டும் நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2  மணிக்கும் போராட்டம் தொடர்ந்த தால், நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை யிலும் தமிழக எம்.பி.க்கள் டி-சர்ட்  டிற்கு, மாநிலங்களவைத் தலை வர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரி வித்தார். நாடாளுமன்றக் குழு  தலைவர்கள், தன்னை அலுவலகத் தில் வந்து சந்திக்குமாறு கூறிய ஜக தீப் தன்கர், அவையை நண்பகல்  வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.  மீண்டும் 12.15 மணிக்கு அவை கூடிய போதும், அமளி தொடர்ந்தால், 2 மணி  வரையும், பின்னர் நாள் முழுவதும்  மாநிலங்களவை ஒத்திவைக்கப் பட்டது.