tamilnadu

img

தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தால் நாடாளுமன்றம் அமளி; ஒத்திவைப்பு!

தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தால் நாடாளுமன்றம் அமளி; ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்  தொடரின், இரண்டாம் கட்ட அமர்வின்  இரண்டாவது நாள் கூட்டம், செவ்வா யன்று காலை கூடிய நிலையில், இந்தித் திணிப்பு மற்றும் சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ. 2, 152 கோடி நிதியை வழங்க மறுப்பது, சூழ்ச்சிகரமான தொகுதி மறுசீரமைப்பு  உள்ளிட்ட விவகாரங்களை தமிழக எம்.பி.க்கள் மீண்டும் விவாதத்திற்கு எழுப்பினர்.  இதனால், நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதுடன் அவை நட வடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, கருப்புச் சட்டை அணிந்  தும் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக  எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.