போராடுவதற்குகூட எஜமானர்களின் அனுமதிக்கு காத்திருக்கும் பழனிசாமி! சுயமரியாதையை அடகுவைத்து பாஜகவுடன் கூட்டணி
முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல் சென்னை, நவ. 24 - கொள்முதலுக்கான நெல்லின் ஈரப்பத அளவை, ஒன்றிய பாஜக அரசு அதிகரிக்கா ததைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திரு வாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் புகைப்படங் களைப் பகிர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். “டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காத- நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?” என்ற தலைப்பிட்டுள்ள அந்தக் கடிதத்தில், நீர்நிலைகள் நிறைந்து, உழ வர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங் களை அதிகரித்து அரசு காத்திருந்ததாகவும், அதிகப்படியான மழைப்பொழிவால் நெல்மணி கள் ஈரமான போது, “சாகுபடிக் காலத்திற்கு முன்ன தாகவே ஏன் அறுவடை செய்யவில்லை” என்றெல் லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தவர் தான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தான் கடிதம் எழுதிய நிலையில், அந்தக் கோரிக்கை களை ஒன்றிய அரசு நிராகரித்து விட்டதாகவும், கழனியில் பாடுபட்ட உழவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக தற்போது களத்தில் போராடிக் கொண்டி ருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கு துணைநிற்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி, யாரிடம் அனுமதி பெறுவ தற்காக காத்திருக்கிறாரோ? என்றும் சாடியுள்ளார். ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் கூட்டணி அமைத்தால் அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். ஆனால், சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும் தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா? என்று முதல்வர் கேள்வி எழுப்பி யுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி தமிழ்நாட்டு உழவர் களின் கோரிக்கைகளைக் கேளுங்கள் என்று ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள தங்களின் கூட்டணி (பாஜக) கட்சியிடம் சொல்வரா? என்றும், இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது, என்றும்; உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமை யாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பற்காகவே, இவ்வளவு கேள்விகளையும் எடப்பாடி பழனி சாமியிடம் கேட்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டு உள்ளார்.