மதுரையில் துண்டறிக்கை வழங்கி பெ. சண்முகம் பிரச்சாரம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் வேகமெடுத்துள்ளன. இதனொரு பகுதியாக, மாநாடு நடைபெறும் செய்தியை, மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கும் இயக்கம் துவங்கியுள்ளது. இதனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மத்திய 2-ஆம் பகுதிக்குழு சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நகைக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் வணி கர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் துவக்கி வைத்தார். பொது மாநாடு, கருத்த ரங்கம், கலைநிகழ்ச்சிகள், பேரணி, பொதுக் கூட்டங்களில் திரளாக பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், இரா. லெனின், பகுதிக்குழு செய லாளர் பி. கோபிநாத், மாவட்டக்குழு உறுப்பி னர் பி. ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை பெத்தானியாபுரம், அரசரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை பிரச்சாரம் செய்யும் விதமாக இத்தகைய எழுச்சிமிகு சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.