அலங்கார மலர்த் தாவரங்கள் நீர்வழிப் பாதைகளை தூய்மைப்படுத்தவும் பயன்படுகின்றன. பெரிய ஆப்பிரிக்க மேரி கோல்டு பூக்கள் நீர்வழிகளில் இருந்து பாஸ்பரஸ், நைட்ரஜனை உறிஞ்சும் ஆற்றல் பெற்ற மிகச் சிறந்த தாவரங்கள் என்று யு எஸ் மயாமியில் நடந்த ஆய்வு கூறுகிறது. அலங்கார மலர்த் தாவரங்கள் அலங்காரத்திற்கும் அழகுக்கும் மட்டும் உதவுவதாக இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை நீர் மாசையும் அகற்ற உதவும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வேளாண்மையில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பிற வேதிப்பொருட்களால் ஆனவை. இவை மழைக் காலத்தில் நீருடன் கலந்து நீர்வழிப் பாதைகளை வந்து சேர்கின்றன. மாசுபட்ட இந்த நீரில் உள்ளவற்றை பாசிகள் உண்டு வேகமாக வளர்கின்றன. இதனால் நீர்வழிப் பாதை களின் உயிரூட்டத்திற்கு அவசிய மான ஆக்சிஜன் நீரில் இல்லாமல் போகிறது. மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் கொல்லப்படு கின்றன. இது ஒட்டுமொத்த நீர்ச் சூழலையும் மாசுபடுத்துகிறது. மாசுபட்ட நீரை சுத்தப்படுத்த மயா மியில் உள்ள விஞ்ஞானிகள் பழங்காலத்தில் மெக்சிகோவில் நடைமுறையில் இருந்த ஆஸ்டெக் (Aztec) வேளாண் முறையால் கவரப்பட்டு நீரில் மிதக்கும் பூக்கும் தாவரங்களை பயன்படுத்தி ஆராய்ந்தனர். இதற்காக பல அலங்கார மலர்த் தாவரங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டு செலவு குறைந்த பாய் போன்ற பரப்புகளில் வைத்து மாசு பட்ட நீர்நிலைகளில் மிதக்கவிடப் பட்டு ஆராயப்பட்டன. பன்னி ரண்டு வார கால ஆய்வுகளுக்கு பிறகு பெரிய ஆப்பிரிக்கன் மேரி கோல்டு (large African mari gold) தாவரங்கள் நீர் வழிகளை சுத்தப்படுத்துவதில் மிகச் சிறந் தவை என்று கண்டறியப்பட்டது. இவை சுத்திகரிக்கப்படாத நீரில் இருந்து சுத்தப்படுத்த பயன் படுத்தப்படும் மற்ற இயற்கை சுழற்சி முறைகளை விட 52% பாஸ்பரஸ், 36% நைட்ரஜனை அதிக அளவில் உறிஞ்சுகின்றன. மற்ற அலங்கார மலர்த் தாவ ரங்களையும் பயன்படுத்தி ஆய்வு கள் நடைபெற்றுவருகின்றன. நீண்ட தண்டுடன் உள்ள மேரி கோல்டு செடிகள் மாசு களை அகற்றுவதுடன் வணிகரீதி யில் மலர்ப் பண்ணைகளில் வளர்க்கப்படும் மற்ற பூச்செடிகள் போல உயர்தரமான பூக்களை அதிக அளவில் தருகின்றன. இதனால் இந்த மலர்களை கொய்து அலங்காரத்துக்காக பயன்படும் பூக்களாகவும் (cut flowers) பயன்படுத்தலாம். இது நீர்வழிப் பாதைகளை தூய்மைப் படுத்தும் திட்டங்களின் நிதி செயல்பாடுகளுக்கும் உதவும். இயற்கையின் படைப்பில் மலர்த் தாவரங்கள் மனித குலத்திற்கு ஆற்றும் அளவற்ற சேவை களுக்கு இது ஒரு சிறிய எடுத்துக் காட்டு மட்டுமே.