ஓபிஎஸ் உள்ளே: இபிஎஸ் வெளியே
பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பெறும் அமளியில் ஈடுபட்ட போதும் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பால் மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி அய்யப்பன் உள்ளிட்டோர் அமைதியாக இருந்தனர். பேர வைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக் கெடுப்பு நடந்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மா னத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “அதிமுக உறுப்பினர் என்ற அடிப் படையில் கொறடா உத்தரவை மீற கூடாது என்பதற்காக வாக்களித்தேன்” என்றார். இந்த சம்பவம் நடந்த 10 நாட்களில், எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பேரவை யில் வெளியேற்றப்பட்ட போதும், ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக் கள் வெளியேற்றப்படவில்லை. மேலும், அவர்களும் வெளி நடப்பு செய்யவில்லை. துணை முதலமைச்சர் பதி லுரையை முழுமையாக கேட்டனர்
‘ரூ’வால் அலறிய ஃபாசிஸ்ட்!
“துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக தனது துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவரங்களுக்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டா லின், “பொதுவாக சிலர் ஒரு பேப்பரில் எழுத தொடங்கும் போது ‘உ’ போட்டு எழுதுவர். ஆனால் நம்முடைய முதல மைச்சர் ‘ரூ’ போட்டு இந்த பட்ஜெட்டை தொடங்கி வைத்தார். பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழ்நாட்டை அடக்க நினைத்தாலும் ஒரே ஒரு ‘ரூ’ வை போட்டு அலற வைத்துள்ளார். இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப் பையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனு மதிக்க மாட்டார். எந்த திணிப்பும் யாராலும் கொண்டு வர முடி யாது”என்றார்.
ரூட் மாறிய எடப்பாடி பழனிசாமி
“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய காரில் ஏறி, அவர் செல்ல முயன்றபோது, தயவுசெய்து எனது காரை எடுத்துச் செல்லுங்கள்; எனக் கொன்றும் பிரச்சனையில்லை என்று நான் சொன்னேன். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், எங்கள் கார் தவறாக எங்கும் சென்று விடாது என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு தில்லியில் ரூட் மாறி, கிட்டத்தட்ட 3 கார்கள் மாறிச் சென்றிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் களது கட்சி அலுவலகத்திற்கு சென்றிருப்பதாகச் சொன் னார்கள். அதற்கு வாழ்த்துக்கள்.
சுய உதவிக் குழுக்கள் சாதனை
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் புதிய மகளிர் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. சென்ற ஆண்டு 35 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற இலக்கை கொடுத்தார். அதை முடித்துவிட்டோம். இந்த ஆண்டு ரூ. 37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்புகளாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள், கடந்த 5 ஆண்டுகளில் சரா சரியாக ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு விற்பனையானது. சென்ற ஆண்டு மட்டும் ரூ.300 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப் படும். இதன் மூலம் இன்னும் ஏராளமான பலன்களை பெறலாம்.
வீராணம் ஏரியில் படகு இல்லம்?
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி வீரா ணம் ஏரி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கந்த குமரம் பகுதியில் படகு இல்லம் அமைக்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதி லளித்த அமைச்சர் ராஜேந்திரன், வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.