tamilnadu

img

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு

மதுரை, ஜன. 15- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 15 அன்று ஜல்லிக் கட்டுப் போட்டி நடைபெற் றது. சீறிப்பாய்ந்த காளை களை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.  இதில் டங்ஸ்டன் திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரி வித்து பதாகைகளுடன் சிலர் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.அடக்கிய வீரர்களுக்கு  தங்க நாண யங்கள், கட்டில், பீரோ, மிதிவண்டி, மெத்தை, ரொக்கப் பரிசு, சில்வர் அண்டா,  கிரைண்டர், மிக்சி,  தண்ணீர் மோட்டார், எல்இடி தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.  ஜல்லிக்கட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேர வை உறுப்பினர்கள் ஏ.வெங்கடேசன், மு.பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்

46 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள்   வீசியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமை யாளர்கள், பார்வையாளர்கள், சிறுமி, சிறுவன்  என 46-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். காயமடைந்த வீரர்களை முத லுதவிக் குழுவினர் உடனடியாக அவசர ஊர்திகளில் பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.  பலத்த  காயமடைந்த 5 பேர் அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.   தகுதி நீக்கம் மருத்துவக் குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தபோது, ஒரு காளைக்கு கால்நடை மருத்துவரின் கையெழுத்தை போலியாக போட்டுக் கொண்டு வந்திருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து காளையின் உரிமையாளரை அழைத்த கால்நடை மருத்துவர்கள் அவரை  கடுமையாக எச்சரித்து காளையை தகுதி நீக்கம் செய்து அனுப்பினர். ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 911 பங்கேற்றன. 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 

பரிசுகள்

அதிகபட்சமாக 14 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி  வீரர் பார்த்திபன் முதலிடம் பெற்றார். அவ ருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.  மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம்  13 காளைகளுடன் இரண்டாமிடம் பிடித்த நிலையில் அவருக்கு இருசக்கர வாகனம்,  12 காளைகளை பிடித்து மூன்றாமிடம் பெற்ற  பொதும்பு பிரபாகரனுக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப் பட்ட சத்திரப்பட்டியை சேர்ந்த காளை உரிமையாளர்  விஜய தங்கபாண்டியனுக்கு, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டா வது சிறந்த காளையாக சின்ன பட்டியைச் சேர்ந்த கார்த்திக் காளை தேர்வு செய்யப் பட்டு உரிமையாளருக்கு நாட்டுப் பசுவும்,  கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இது போல் குருவித்துறையைச் சேர்ந்த பவித்ரன்  என்பது காளை 3 ஆவது இடத்தை பிடித்த நிலையில் காளை உரிமையாளருக்கு  விவ சாய எந்திரம் பரிசாக வழங்கப்பட்டது. பரி சளிப்பு விழாவில்,  அமைச்சர்கள் பி.மூர்த்தி,  பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், தேனி  மக்களவை உறுப்பினர் தங்க  தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் மா. சௌ.சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு  பாலமேடு ஜல்லிக்கட்டில்,ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. மதுரை மாவட்டம்  மேலூரில் பல்லுயிர்  சூழல் மண்டலமான அரிட்டாபட்டி மற்றும் பல்வேறு கிராமங்களை அழிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி பல்வேறு கிராமமக்களும் அரசியல் கட்சியினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே பார்வையாளர்கள் அமரும் கேலரியின் மீது ஏறி, “அரிட்டா பட்டியை பாதுகாப்போம். கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கக்கூடாது” என வலி யுறுத்தும் Save Aritrapati’ என எழுதப்பட்ட பதாகையுடன் பங்கேற்றது, கவனத்தை ஈர்த்தது; போராட்டத்தைப் பறைசாற்றியது.