பயந்து வெளிநடப்பு செய்யும்
எதிர்க்கட்சித் தலைவர்’
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (மார்ச் 20) கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதி கோரினார். நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்வரிசை தலை வர்கள் பேச வேண்டியுள்ளதால் கவன ஈர்ப்புத் தீர்மா னங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். கவன ஈர்ப்புத் தீர்மானம் அல்ல, அவசர பொது முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேரவைத் தலைவரி டம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உரிய பதில் தரமுடியும். இதுதான் மரபு. வழக்கம். எனவே, மரபுகளை மீறக் கூடாது என்றார், அவை முன்னவர் துரைமுருகன். எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதியுங்கள். அவர் எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அதற்கு பதில் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார் முத லமைச்சர்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த கொலைகள் குறித்து பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டு களையும் அடுக்கிக் கொண்டே சென்றார். ஆதாரம் இல்லா மல் குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது என்று பேரவைத் தலைவர் கூறியதால் அதிமுக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவி யது. இதைத் தொடர்ந்து, இபிஎஸ் தலைமையில் திமுக- வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய முதலமைச்சர், “எதிர்க்கட்சித் தலைவர் முறைப்படி, விதிமுறைகளின்படி அனுமதி கேட்கவில்லை. இதனால், நீங்கள் கூட அனுமதி தருவதற்கு யோசித்தீர்கள். ஆனால், நான் உங்களிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அவரைப் பேச அனு மதித்தீர்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் முறை யாக பேசியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் அடைய நினைப்பவர், சென்ற ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி சீரழிந்து கிடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனது பதிலுக்கு பயந்து கொண்டு வெளிநடப்பு செய்ததாக கடுமையாக சாடினார். மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) ஒரு நாளில் மட்டும் 4 கொலைகள் நடைபெற்று இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கோவை சம்பவம் முதல்கட்டமாக தற்கொலை என்று விசார ணையில் தெரியவந்துள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் குடும்பத் தக ராறு காரணமாக கொலை நடைபெற்றுள்ளது. ஈரோடு சம்ப வத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவலர்கள் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். காவல் துறையினர் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.