திய வகுப்பறை, பொது விநியோக கட்டடங்கள் திறப்பு
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 இன் கீழ் திருவாரூர் நகராட்சி பனகல் சாலையில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது விநியோக கட்டடத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, மாநில நிதிக்குழு - பள்ளி மேம்பாட்டு நிதி 2022-23- இன் கீழ் திருவாரூர் நகராட்சியி லுள்ள, கே.டி.ஆர் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப் பட்டுள்ள இரண்டு புதிய வகுப்பறை கட்டடத்தினையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.