2 வாரத்தில் திறப்பு
இராமேஸ்வரம், மார்ச் 23- பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்னும் 2 வாரங் களில் திறக்க திட்டமிடப் பட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் முதல் வாரம் அல்லது 3 ஆவது வாரத்தில் திறப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள் ளது. இந்த விழாவில் பிரத மர் மோடி பங்கேற்க உள் ளார். பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து இது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின் னரே ராமேஸ்வரம் ரயில் நிலையப் பணிகள் முடிவ டையும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவு சல் கிஷோர் தெரிவித்தார்.
நிர்மலாவுக்கு பதிலடி
சென்னை, மார்ச் 23- “தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய் வதைத்தான் இத்தனை கால மாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வர லாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை நிர்மலா சீதா ராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்களை எள்ளி நகையாடும் உங்க ளுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று ஒன் றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.