உள்ளிக்கோட்டை ஊராட்சியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
திருவாரூர், மே 21- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - திருச்சி ராப்பள்ளி கோட்டம், கண்டிதம்பேட்டை திட்டப் பகுதியில், உள்ளிக்கோட்டை ஊராட் சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 80 எண்ணிக் கையிலான அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாயன்று திறந்து வைத்தார். இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் குத்து விளக்கேற்றி, பார்வையிட்டார். இந்த ஒவ்வொரு குடியிருப்பும் வசிப் பறை, சமையலறை, படுக்கையறை, குளிய லறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகளு டன் கட்டப்பட்டுள்ளன. எல்லா குடியிருப்பு களும் போதுமான காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி, ஆழ்துளைக்கிணறு வசதி மற்றும் கீழ்நிலைத் தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தேக்கத் தொட்டி வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால், குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு, பேவர் பிளாக் நடைபாதை மற்றும் ஆழ் துளைக் கிணறு ஆகிய அடிப்படை வசதி களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், மன்னார்குடி வரு வாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.