tamilnadu

img

நீட் தேர்வு: அர்த்தமற்ற கெடுபிடிகளும் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்களும்

நீட் தேர்வு: அர்த்தமற்ற கெடுபிடிகளும் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்களும்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக் கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்து வக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’  தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வு மையங்களில் மட்டும் சுமார்  1.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தலை நகர் சென்னையில் மட்டும் 44 மையங்களில் சுமார் 21,960 பேர் தேர்வு எழுதினர். பதற்றம்-ஏமாற்றம்... திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பெருமாநல்லூர் என 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 3,212 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர்.‌ 11  மணிக்கு மாணவர்கள் தேர்வு மையங்களில் அனு மதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இத னால் கலக்கமடைந்த மாணவர்கள் செய்வதறி யாது தவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட நீட் தேர்வு மையம் எது என்று தெரியாமல் அலைந்து  திரிந்து வேறு மையம் ஒன்றிற்கு சென்று விட்டு, விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி தேர்வு மையத்திற்கு 1.50 மணிக்கு வந்ததால், மாணவி ஒருவரை தேர்வு எழுத அனுமதிக்க முடி யாது என அலுவலர்கள் கண்டிப்புடன் தெரிவித்த னர். இதனால் அந்த மாணவி ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.  அதேபோல், ப்ரீத்தி என்ற மாணவி செய்யாறு தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவரும் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். குழப்பம்... ஹால்டிக்கெட்டில் மாவட்டம் பெயர் இல்லாத தால், தருமபுரிக்கு பதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சில மாணவர்கள் சேலத்துக்குச் சென்றுள்ளனர். காரணம், “அரசு கல்லூரி, சேலம் பைபாஸ் சாலை”  என்று மட்டும் ஹால் டிக்கெட்டில் அச்சடிக்கப் பட்டிருந்ததால் குழப்பமடைந்தனர்.

 சேலத்துக்குச் சென்ற பிறகுதான், அந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையம் தருமபுரி மாவட்டம் என்று தெரியவந்தது. சேலத்தில் இருந்து  மீண்டும் தருமபுரி செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், 3 மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. பிறகு, கால் டாக்ஸி தனியார் வாடகை கார் மூலம் அவசர அவசரமாக தர்மபுரி மையத்திற்கு சென்று தேர்வு எழுதும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர் கடும் வெயி லில் அவதிப்படும் சூழலே பெரும்பாலான மையங் களில் இருந்தது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதி யைச் சேர்ந்த திலீப்குமார் என்ற மாணவர் தாமத மாக வந்த நிலையில், பெற்றோர் கூச்சலிட்டதால் கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்ற பிறகு தேர்வு  மையம் மாறி உள்ளது என அறிந்து மீண்டும் வெளியே அனுப்பப்பட்ட மாணவர், அரை கிலோ மீட்டர் தூரம் வேறு ஒருவரின் வாகனத்தில் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதினார். வாக்குவாதம் கிருஷ்ணகிரியில் நீட் தேர்வு மைய கதவுகள் பூட்டப்பட்ட பிறகு மாணவர் ஒருவர் வந்ததால் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. பெற்றோர்கள் அனைவரும் ஒன்றுகூடி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாணவருக்கு அனுமதி கிடைத்தது. மாணவிக்கு உதவிய பெண் காவலர்... திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி மையத் தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் ஆடையில்  (சுடிதார்) அதிக எண்ணிக்கையிலான பட்டன்கள் இருப்பதாகக் கூறி தேர்வு மையத்திற்குள் செல்ல  அனுமதிக்கவில்லை. இதனால் அந்த மாணவி, தன்னால் தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அங்கேயே அழுதுள்ளார். அப்போது, தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த மகளிர் போலீசார், உடனடியாக மாணவியை  தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் சென்று புதிய உடை வாங்கிக் கொடுத்தார். அந்த உடையை அணிந்து கொண்டு மாணவி மீண்டும் தேர்வு மையத்திற்கு வந்தார்.

பின்னர் சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அந்த மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதித்த னர். மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி செய்த  பெண் போலீசாரின் செயல் சமூக வலைதளங்களில்  வைரலானது. மாணவியை உடனடியாக கடைக்கு  அழைத்துச் சென்று வேறு ஆடை வாங்கி கொடுத்து  தேர்வு எழுத உதவிய பெண் காவலருக்கு பாராட்டு கள் குவிந்து வருகிறது.  ஹால் டிக்கெட்டுக்கு உதவிய காவலர்... மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள யாதவா ஆண்கள் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் அமர்நாத், ஹால் டிக்கெட்டை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, கூடல் புதூர் காவலர் விஜயலட்சுமி போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் கொண்டு வந்ததால் தேர்வு எழுத முடிந்தது. டீ சர்ட்டை கழற்றி கொடுத்த அப்பா! அதேபோல், மாணவர் ஒருவர் முழுக்கை டீ  சர்ட்டுடன் வந்ததால் தேர்வு எழுத அனுமதி  மறுக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையி னர் அறிவுறுத்தலுக்குப் பின் அவரின் அப்பா அணித்திருந்த அரைக் கை டீ சர்ட்டை மாற்றிக்  கொண்ட பின், தேர்வெழுத அனுமதி வழக்கப்பட்டது. வெள்ளி அரைஞாண் கொடி அறுப்பு... திருவண்ணாமலை நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர், வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் மாணவரின் தந்தையை வரவழைத்து, அரை ஞாண் கொடியை அகற்றிய பிறகு தேர்வு மையத் திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

தாலியை கழட்டிய மாணவி... திருவாரூரில் நடந்த தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில், நீட் தேர்வு எழுத கணவருடன் வந்த மாணவி, கழுத்தில் தங்க தாலி கயிறு அணிந் திருந்ததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் சல சலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுத வந்த  மாணவியின் கணவரை வரவழைத்தனர். தனது மனைவியின் கழுத்தில் இருந்து தாலியை கழற்றி  எடுத்துச் சென்ற பிறகு  நீட் தேர்வுக்கு அனுமதித்த னர். திருநங்கையின் விடாமுயற்சி... கோவையைச் சேர்ந்த திருநங்கை இந்திரஜா,  இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதினார். தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வு எழுதும் முதல் திரு நங்கை இவர்தான். இதுகுறித்து அவர் கூறுகை யில், “கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில்  மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை. விடாமுயற்சி யுடன் தற்போது இரண்டாவது முறையாக அதனை  எதிர்கொள்வதாக தெரிவித்தார். திருநங்கைகளுக் கான இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதனை எதிர் கொள்வதாகவும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவ தாக தெரிவித்தார். பெற்றோர் மற்றும் ஆசிரி யர்கள் தன்னை ஊக்குவித்து வருவதாக தெரிவித்த  அவர், அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும்” என்று கூறினார். குளறுபடி: பெற்றோர் மறியல்  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டி ருந்த நீட் தேர்வு மையத்திற்கு மதியம் 1:30 மணிக் குள் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனை வரும் பயோமெட்ரிக் அடையாளத்தை பதிவு செய்து விட்டு தேர்வு அறைக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் 1:40 மணி ஆகியும் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே போல் தேர்வு மையத்தின் சில அறைகளில் கடி காரம் இல்லாததும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே ஒரு பயோமெட்ரிக் கருவி மட்டுமே இருந்த  நிலையில் சில மாணவர்கள் அவசரத்தில் பயோ மெட்ரிக் பதிவு செய்யாமலே உள்ளே சென்று தேர்வு எழுத சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால்  பயோமெட்ரிக் வைக்காத தங்களுடைய குழந்தை கள் தேர்ச்சி அடைவார்களா, இல்லையா என்ற அச்சத்தில் உள்ள பெற்றோர்கள் சரியான ஏற்பாடு களை செய்து கொடுக்கவில்லை என திருச்செங் கோடு-சங்ககிரி சாலையில் அரை மணி நேரத் திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடி யாக அங்கு வந்த போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மயங்கி விழுந்த மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பாலி டெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த  கொத்தமங்கலத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற  மாணவி திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்டது. அதேபோல், பாளையங் கோட்டை நீட் தேர்வு மையத்தின் முன்பு காத்திருந்த மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்வு எழுதும் மாணவிகள் காதுகளில் கம்மல்  அணியவும், ஜடை போட்டுக் கொண்டு  வரவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், மாணவர் கள் பேண்ட் பெல்ட் அணியவும் வெள்ளி அரை ஞாண் கயிறு அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப் பட்டது. பல்வேறு கட்டங்களாக நடந்த சோதனை களுக்குப் பிறகுதான் தேர்வு மையத்துக்குள் மாண வர்களை அனுமதித்தனர்.