tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மொரீஷியஸூடன் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுதில்லி, மார்ச் 12- பிரதமர் நரேந்திர மோடி  இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மொரீஷியஸ் சென்றிருந்த நிலையில், அவ ரது முன்னிலையில், கடல் சார் பாதுகாப்பு, தேசிய நாணயங்களில் வர்த்தகம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்து ழைப்பை வழங்குவது தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. செய ற்கை நுண்ணறிவு, சுகாதா ரம், டிஜிட்டல் தொழில்நுட் பத்தை உள்ளடக்கும் வகை யில் மோரீஷஸுடன் மேம்  பட்ட மூலோபாய கூட்டா ண்மை குறித்தும் இந்த ஒப்  பந்தத்தின்போது ஆலோசிக்  கப்பட்டுள்ளது.

மார்ச் 22இல் கிராம சபை கூட்டம்

சென்னை, மார்ச் 22- ‘மார்ச் 22’ உலக தண் ணீர் தினத்தையொட்டி, அன்  றைய தினத்தில் தமிழ்நாடு  முழுவதும் உள்ள அனை த்து ஊராட்சி மன்றங்களில்  கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில் மழை  நீரை சேகரித்தல், தண்ணீரை  சிக்கனமாக பயன்படுத்து வது தொடர்பாக விவாதிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் குறித்து விவாதித்து தீர்மா னம் நிறைவேற்றி செயல் படுத்த வேண்டும் என்றும்  தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது.

பாகிஸ்தானில் ரயிலைக் கடத்திய பயங்கரவாதிகள்

155 பேர் வரை மீட்பு இஸ்லாமாபாத், மார்ச் 12- பாகிஸ்தானில் பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில்  இருந்து இதுவரை 155 பய ணிகள் மீட்கப்பட்டுள்ளதாக வும், 30 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்துள்ள தாகவும் அந்நாட்டு அரசு ஊட கம் தெரிவித்துள்ளது. மீத முள்ள பெட்டிகளில் உள்ள  250 பயணிகளை மீட்பதற் கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர் கள் ஈடுபட்டுள்ளனர். இதனி டையே, பிணைக் கைதி களாக வைக்கப்பட்டுள்ள  சில பயணிகளை மனித வெடிகுண்டுகளாக பயங்கர வாதிகள் மாற்றியுள்ளனர் என வெளியான தகவல்,  பாகிஸ்தான் அரசை அதிர்ச்  சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

6 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை, மார்ச் 12- தமிழகம், புதுவை மற்  றும் காரைக்கால் பகுதிகளில்  மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை யிலான 6 நாட்களுக்கு மித மான மழைக்கு வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. மேலும், மார்ச் 13  முதல் மார்ச் 15 வரை, தமிழ கத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்  யக்கூடும். மார்ச் 16 அன்று,  தமிழகத்தில் ஓரிரு இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்  கால் பகுதிகளிலும் இடி, மின்  னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்  யக்கூடும். மார்ச் 17, 18 தேதி களில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக் கூடும்.