tamilnadu

வங்க தேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்!

புதுதில்லி, நவ. 28 - வங்கதேசத்தில் சிறுபான்மையி னருக்கு எதிராக ஏவப்பட்டுள்ள தாக்கு தல்களிலிருந்து அங்குள்ள இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரைப் பாது காத்திட வங்கதேச இடைக்கால அர சாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வங்க தேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது தாக்கு தல்கள் தொடுக்கப்படுவது கவலைய ளிக்கக்கூடிய விதத்தில் இருக்கும் நிலை தொடர்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தி ருக்கின்றன. மக்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் பிளவினை ஏற்படுத்த மத  அடிப்படைவாத சக்திகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அதே சம யத்தில், ஆட்சியாளர்களோ மதவெறி யர்களின் தாக்குதல்களிலிருந்து மக்க ளைக் காப்பாற்றிட உறுதியான நட வடிக்கைகள் எதையும் இதுவரை எடுக்க வில்லை. மக்களிடையே அமைதி யையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்காக, வங்க தேச இடைக்கால அரசாங்கம் இனியும் தாமதம் எதுவும் செய்யாது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்தப் பிரச்சனையை முன்வைத்து, இந்தியாவிற்குள், இந்துத்துவா சக்திகள் மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் காட்டுமிராண்டித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு, இங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்  மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. மதத்தின் அடிப்ப டையில் மேற்கொள்ளப்படும் பிளவுவாத அரசியல் வங்க தேசத்திற்கும், இந்தியா விற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.