பால் விலை உயராது
சென்னை, மார்ச் 20- பால் உற்பத்தியாளர் களும் ஏழை, வாங்கிப் பரு கும் மக்களும் ஏழை. எனவே தனியார் பால் விலையை உயர்த்தினாலும், பால் விலையை உயர்த்தும் எண் ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. தனியார் பால் லிட்ட ருக்கு ரூ. 56-க்கு விற்கப்படும் நிலையில் அரசு ரூ. 40-க்கு மட்டுமே விற்கிறது என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் சட்டமன்றத் தில் தெரிவித்தார்.
எப்போதும் இருமொழி கொள்கை தான்
சென்னை, மார்ச் 20- நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எழுப் பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பதிலளிக் கையில், தமிழ் நாட்டில் எப் போதும் இருமொழி கொள்கை தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மொழிக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
மழைக்கு வாய்ப்பு
சென்னை, மார்ச் 20- “தமிழ்நாட்டில் மார்ச் 26 முதல் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்” என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.