tamilnadu

img

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்: பெ.சண்முகம்

உடுமலை, ஜூலை 13- தென்னை விவசாயிகள் பெரும் துயரத்தில் சிக்கியுள்ள நிலையில், தமிழக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேங்காய்  விலை வீழ்ச்சியை தடுக்க நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். கொப்பரையின் விலையை அதி கரித்துத் தர வேண்டும். ஒன்றிய அரசு கொப்பரையை கூடுதல் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.  இதனொரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், உடுமலையில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலையில் தேங்காய்களை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. உடுமலை, மடத்துக்குளம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தேங்காய் விலை குறைவால் வியாபாரிகள் தேங்காயை கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒன்றிய  அரசு, உரித்த தேங்காய் கிலோ ஒன்றிற்கு  50 ரூபாயும் அதே போல் கொப்பரை தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 140 ரூபா யும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசே தேங்காய்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த ஏழு நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை தர வேண்டும்.  ஒன்றிய அரசு பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களை வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்வதை  தடை செய்து இங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய்  எண்ணெய்யை பொது விநியோகத்திட்டத் தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய ஒன்றிய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு கொப்பரை தேங்காய் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பாக விவசாயிகள் கொண்டு வந்த தேங்காய்களை உடைத்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமை ஏற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டப் பொருளாளர் பால தண்டபாணி, தென்னை விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் வை.பழனிசாமி, அ.லெனின், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் எம்.எம்.வீரப்பன் மற்றும் விவ சாய சங்கத்தின் ராஜகோபால், ஈஸ்வரன், முத்துசாமி, சுந்தர்ராஜன், ஸ்ரீதர் மற்றும் துரைசாமி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, பெ.சண்முகம் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. பச்சை  தேங்காயை தமிழக அரசு விவசாயி களிடம் இருந்து கொள்முதல் செய்ய  வேண்டும்.

கேரளா மாநில அரசு உரித்த தேங்காயை கூட்டுறவு அமைப்புகளின் மூலமாக கொள்முதல் செய்து, நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. தென்னை அதிகமாக விளை யும் மாநிலம் என்கிற வகையில், தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தும் வகையில், தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகளின் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்பு சத்து நிறைந்தது என்கிற  தவறான பிரச்சாரத்தை சில மருத்து வர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சமையலுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன் படுத்தாத நிலை இருக்கிறது. கேரளா மற்றும் இலங்கை மக்கள் தேங்காய் எண்ணெய்யை முழுமையாக சமை யலுக்கு பயன்படுத்தி வருகின்ற னர். அவர்கள்  ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகை யில், தமிழக அரசு தேங்காய் எண் ணெய்யை உணவுக்கு பயன்படுத்தும் வகையில் ரேசன் கடைகளில் விற்பனை செய்தால், ஓரளவிற்கு தென்னை விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அந்த வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.