முதலமைச்சருக்கு மே 3 பாராட்டு விழா
பல்கலைக்கழக பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கு பணியிடை பயிற்சியைத் தொடங்கி வைத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழி யன் பேசினார். அப்போது,“சட்டப் போராட்டத்தை நடத்தி, பல்கலைக்கழக உரிமையை மீட்டுத் தந்த நமது முதலமைச்சருக்கு மே 3 அன்று சென்னை நேரு உள் விளை யாட்டு அரங்கத்தில் கல்லூரி முதல்வர்கள், சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பினர், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி யாளர்கள் சார்பாக மாபெரும் பாராட்டு விழா நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.