tamilnadu

img

கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை – கைது!

கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை – கைது!

குடிநீர், பாதாளச் சாக்கடைக்கு அநியாயமான வரி உயர்வு

கோயம்புத்தூர், மே 21 –  கட்டடத்தின் அளவைக் கொண்டு,  குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைக் கான கட்டணங்களை அராஜகமாக நிர்ணயித்து, மக்களிடம் வரிக் கொள்ளை அடிப்பதைக் கண்டித்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அவர்களில் ஐநூறுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

எந்த விவாதமும் இன்றி தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சியில் கடந்த மே 14 அன்று நடைபெற்ற மாநக ராட்சி அவசர கூட்டத்தின் போது, குடிநீர் கட்டணங்களை கட்டடத்தின் பரப்பள வுக்கு ஏற்ப நிர்ணயம் செய்வது, கட்டடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப பாதாள சாக்கடை வைப்புத் தொகை கட்டணம் நிர்ணயம் செய்வது மற்றும் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க கூடுதல் செலவின மாக 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநகராட்சியில் எந்தவித விவாதமும் இன்றி இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகைப் போராட்டம்

இதன்தொடர்ச்சியாக, விவாதங்கள் எதுவும் இன்றி நிறை வேற்றப்பட்ட இந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி, சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி, ஜோதிபாசு, சுமதி ஆகியோர் தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மாநகராட்சி அலு வலகத்திற்குள் நுழைய முயன்ற வர்களை காவல்துறையினர் தடுத்து  நிறுத்தினர். அப்பொழுது போலீ சாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதனையடுத்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ், என்.ஆர்‌. முருகேசன், வி. தெய்வேந்தி ரன், என். ஆறுச்சாமி, ஆர். கோபால் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், இடைக்குழு செயலாளர்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  

தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்

போராட்டம் குறித்து, சி. பத்மநாபன் கூறுகையில், “கோவை மாமன்றக் கூட்டத்தில் முற்றிலும் ஜனநாயக விரோதமாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. அவசரக் கூட்டம் என்று மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு கொடுத்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மாநகர மக்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட- எண்: 101, 102, 103 தொடர்பான தீர்மானங்கள் 24 பக்கங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  மன்ற உறுப்பினர்களுக்கு படிப்ப தற்கும் நேரம் இல்லை. மன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை. தீர்மா னத்தின் முக்கியத்துவம் குறித்து யாரும் முன்மொழியவும் இல்லை. 20 லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஜனநாயக அமைப்பில் எதார்த்த நடைமுறைகளுக்கு புறம்பாக இப்பொருட்கள் நிறைவேற்றப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, ஜனநாயக விரோதமாக நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றே இந்த போரா ட்டம் நடைபெறுகிறது” என்றார்.