விருதுநகர் பக்தர்களுக்கு உணவு வழங்கிய மார்க்சிஸ்ட் கட்சி
பங்குனித் திருவிழா
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்திமாரியம்மன் கோவில் திருவிழா திங்க ளன்று நடைபெற்றது. இதை யொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக் தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த வருகை புரிந்தனர். இந்நிலையில், பக்தர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் காய்கறி பிரியாணி வழங் கப்பட்டது. நகராட்சி சாலை யில் நடைபெற்ற இந்நிக ழ்ச்சிக்கு ஆர்.மாரிக்கனி, வி.கார்த்திக்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் குழு உறுப்பினர் பி.ராஜா, ரத்ததான கழக செயலாளர் எம்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி துவக்கி வைத்தார். மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், எல்.முரு கன், நகர் செயலாளர் எம். ஜெயபாரத், எம்.பெருமாள் சாமி, பி.கருப்பசாமி, எம். ராஜா, குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.