முதியவரிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்தவர் கைது
தஞ்சாவூர், மார்ச் 26 - தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையைச் சேர்ந்த கே.சிதம்பரம் (72). தற்போது சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கும் அம்மாபேட்டையில் மளிகைக் கடை நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த பி.கே. மோகன்தாஸுக்கும் (48) கடந்த 2014 ஆம் ஆண்டில் நட்பு ஏற்பட்டது. அப்போது, சிதம்பரத்திடம் மோகன்தாஸ் தன்னை முக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பி னர்கள், அமைச்சர் ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், தங்களது மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கித் தருவதாகவும், இதற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பணம் கொடுக்க ரூ.98 லட்சமும், தனது வியாபாரத்துக்காக ரூ. 65 லட்சமும் கடனாக தருமாறும், வேலை கிடைக்கா விட்டால் பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாகவும் கூறி னார். இதை நம்பிய சிதம்பரம், 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் மோகன்தாஸி டம் ரூ.1.63 கோடி கொடுத்தார். ஆனால், மோகன்தாஸ் வேலை வாங்கித் தராததால், அவரிடம் பணத்தைத் திரும்பத் தருமாறு சிதம்பரம் 2018 ஆம் ஆண்டு கேட்டார். பின்னர், 2021, 2022 ஆம் ஆண்டுகளில் சிதம்பரத்தி டம் கடன் உறுதி பத்திரம், 9 காசோலைகளை மோகன்தாஸ் கொடுத்தார். ஆனால், மோகன்தாஸ் வழங்கிய காசோ லைகள் வங்கியில் பணமில்லை என திரும்பி வந்து விட்டன. இதுகுறித்து சிதம்பரம் பலமுறை கேட்டபோது, பணத்தைத் தர முடியாது என மோகன்தாஸ் மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவ லகத்தில் கடந்த பிப்ரவரி 21 அன்று சிதம்பரம் புகார் செய்தார். இதன்பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினர் மார்ச் வழக்குப் பதிந்து, மோகன்தாஸ் கடைக்கு சென்று அழைப்பாணையை ஒட்டினர். இந்நிலையில் பணம் கேட்டு காவல்துறையினர் தன்னைத் தாக்கி, காயப்படுத்திய தாகக் கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக மோகன்தாஸ் சேர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக,மாவட்டக் குற்றப் பிரி வினர் செவ்வாயன்று மோகன்தாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதியவர் போக்சோவில் கைது தஞ்சாவூர், மார்ச் 26 - தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் (70). சம்பவத் தன்று அஸ்லம்கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயதான பள்ளி மாணவிக்கு பாலி யல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அச்சிறுமி பெற்றோரிடத்தில் கூறியு உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். காவல்துறையினர் விசாரித்ததில், முதியவர் அஸ்லம் கான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால், வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஸ்லம் கானை கைது செய்து செவ்வாய்க் கிழமை இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பசுமாடு உயிருடன் மீட்பு அரியலூர், மார்ச் 26 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளையோர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் கறவை மாடுகள் வைத்து பால் வியா பாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் அவர் வளர்த்து வந்த மாடுகளில் ஒரு பசுமாடு காணாமல் போனதால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் இலையூர் தெற்குவெளி தெற்கு தெருவில் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட கிணற்றில் மாடு சத்தம் போடுவது கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்தார். அப்போது 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீ ரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தங்கமணி, செய்வதறியாது பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தார். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.