tamilnadu

img

மதுரை மாணவி தற்கொலை.... 15 உயிர்களை பறித்த நீட் தேர்வு

மதுரை:
மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(18) மன அழுத்தத்தால் தற்கொலைசெய்துகொண்டார். 

மதுரை ரிசர்வ் லைன் ஆறாவதுபட்டாலியன் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவருபவர் முருகசுந்தரம். காவல்துறை சிறப்புப் பிரிவில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவிஅபிராமி வேளாண்துறை அதிகாரியாக திருநெல்வேலி மாவட்டம் கிள்ளிகுளத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மகளும் (18), ஸ்ரீதர் என்றமகனும் உள்ளனர். மகன் ஸ்ரீதர்மதுரை நோபிலி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.ஜோதி ஸ்ரீ துர்கா மேல்நிலைக் கல்வி இரண்டாமாண்டை நிறைவு செய்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகிவந்தார். அவரது தந்தை முருகசுந்தரம் தனது மகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு அவருக்கு ஊக்கம் கொடுத்துவந்துள் ளார். கடந்தாண்டு நீட் தேர்வு எழுதிதோல்வியடைந்துள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஜோதி ஸ்ரீ துர்கா-வைஉற்சாகமும், ஊக்கமும் அளித்துஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நீட் தேர்விற்கு தயார்படுத்திவந்தனர். தேவையான பாடப்புத்தகங்கள், கல்வியாளர்களின் ஆலோசனைகளுடன் துர்கா முழுஅளவில் தேர்விற்கு தயாராகி உள்ளார்.

தேர்வு ஞாயிறு நடைபெறவுள்ளநிலையில் மிகவும் மனஅழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார் ஜோதி ஸ்ரீதுர்கா. அவரை அவரது பெற்றோர்கள் தேற்றியுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஜோதிதுர்காவிற்கு காபி கொடுக்க சென்றபோது, அவர்மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைப்பார்த்துமுருகசுந்தரமும் அவரது குடும்பத்தினரும் கதறியழுதுள்ளனர்.தகவலறிந்து சென்ற தல்லாகுளம் காவல்துறையினர் ஜோதி ஸ்ரீதுர்கா உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து உடற்கூறாய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூராய்வு முடிந்த நிலையில் சனிக்கிழமை பகல் 12 மணியளவில் அவரதுஉடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது. தத்தனேரி மயானத்தில் துக்கம் தாளாமல் கதறியழுத ஜோதிஸ்ரீ துர்காவின் தாய் அபிராமி,“உனக்கு படிப்பில் ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லியிருக்கலாமே, அம்மாவிடம் சொல்லக் கூடாது என்பதற்காக “சொல்லாமலேயே சென்று விட்டாயே” என கதறியழுதது நெஞ்சை உருக்குவதாய்இருந்தது. அவரது தந்தை முருகசுந்தரம் தனது மகளுக்கு இறுதி நிகழ்ச்சிகளை செய்யும்போது கதறிதுடித்தார்.

பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர்கள், நீட்தேர்வு “அவ்வளவு கடினமானதா, கொடுமையானதா” நம்மவீட்டு பிள்ளையின் உயிரை அல் வவா பறித்துவிட்டது எனக்கூறி புலம்பினர்.இந்திய மாணவர் சங்கத்தின்மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க மாநிலநிர்வாகி எம்.கண்ணன், இரு அமைப்புகளின் நிர்வாகிகள் வேல்தேவா, பாலமுருகன், பிருந்தா, கோபிநாத், செல்வா, கார்த்திக் உட்பட ஏராளமானோர் ஜோதி ஸ்ரீ துர்கா-வின் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.உறவினர்கள், நண்பர்கள் கதறியழ, இந்திய மாணவர் சங்கம்,வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப் பின் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலிசெலுத்திய பின் அவரது உடல்மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.தத்தனேரி மின்மயானத்தில் பல்வேறு அமைப்புகள் ஜோதி ஸ்ரீதுர்கா-விற்கு அஞ்சலி செலுத்தியபின் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர்.தொடர்ந்து இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகததில் நீட் தேர்விற்குஎதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடிஅரசே, “ நீட் எனும் வன்முறைக்கு 15 உயிர்களை பறித்தது போதாதா, இன்னும் எத்தனை உயிர்கள் தேவை. நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த ஜோதி ஸ்ரீ துர்கா குடும்பத் திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.