மதுரை:
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், மதுரை மாநகரின் நான்கு மாசி வீதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக வாய்க்கால் கள் தோண்டப்பட்டு வருகிறது. தோண்டப் படும் இடங்களில் மக்கள் வீடுகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது.
இரவோடு இரவாக மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் பள்ளம் தோண்டப்படுவதால் வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் இணைப்புகள், சாக்கடை பைப்புகள் உடைந்துசேதமடைந்து சாக்கடை நீர் செல்லமுடியாமல், குடிநீர் வராமல் உள்ளது. வேலைகள் முடிந்தபின் உடைக்கப்பட்ட சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்புகளை சரி செய்வதற்குகுழாய்கள் வாங்கித்தந்து, அதற்குரிய கூலியும் கொடுத்தால்தான் சரி செய்து கொடுக்கப்படும் மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் மக்கள் எட்டாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய உள்ளது.
இந்தநிலையில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.லெனின், மா.கணேசன், மத்திய பகுதிக்குழுசெயலாளர் பி.ஜீவா, திமுக 83-ஆவதுவட்டச் செயலாளர் தளபதி, எஸ். பாலு, வட்ட பிரதிநிதி சுரேஷ், மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் பி.வரதராஜன் ஆகியோர் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். பின்னர் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.தகவலறிந்து நிகழ்விற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பழுதாகும் குடிநீர் குழாய் மற்றும்சாக்கடை இணைப்பு குழாய்களை சீரமைத்து கொடுக்க பொருட்கள் வாங்கிக் கொடுக்கச் சொல்லக்கூடாது. அதற்கான செலவினத் தொகையும் கேட்கக்கூடாது எனத் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள் மதுரை மாநகராட்சி இப்பணியின் ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் போதேஅதற்கும் சேர்த்து பணம் ஒதுக்கப் பட்டுள்ளது. மக்கள் யாரும் குழாய்இணைப்புகளை சீர்படுத்த எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாமென தெரிவித்தனர்.