tamilnadu

img

மதுரை மீனாட்சி கோவில் அருகே பழங்கால மண்டபம் கண்டுபிடிப்பு

மதுரை மீனாட்சி கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு வாகனம் நிறுத்தும் வசதி கட்டப்படுவதற்காக தோண்டியபோது பழங்கால மண்டபம் கண்டறியப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக இன்று அப்பகுதியில் தோண்டியபோது பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.