மதுரை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சித்திரை பெருவிழா ஏப்.25-ஆம் தேதி நடைபெற வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என கோவில் ஆணையர் நா.நடராஜன் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார்.
பக்தர்களின் ஆத்ம திருப்திக்காக, தல புராணத்தின்படி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் அன்றாடம் நடைபெறும். மே 4-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.05 மணி முதல் 9.20 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்பொழுதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சன்னதி) நான்கு சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி நடத்தி வைப்பார்கள்.
மே 4-ஆம் தேதி நிகழ்வை www.maduraimeenakshi.org-இணைய தளத்தில் திருக்கல்யாண நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும். திருமணமான பெண்கள் திருமாங்கல்ய மங்கல நாண் அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் அன்றைய தினம் காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கலநான் மாற்றிக்கொள்ள உகந்த நேரம். இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.