தாய் மொழி நமக்கு விழி போன்றது
திண்டுக்கல் கருத்தரங்கில் மதுக்கூர் இராமலிங்கம் பேச்சு
தாய் மொழி நமக்கு விழி போன்றது என்று சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசினார். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழனன்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் கே.பிரபாகரன் தலைமை வகித்த இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம், மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுக்கூர் இராமலிங்கம்
கருத்தரங்கில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் போல, ஒரே நாடு ஒரே மொழி என்பது பாஜகவின் நோக்கம். குஜராத்தில் குஜராத்தி மொழி, ராஜஸ்தானில் ராஜஸ்தானி மொழி, உத்தரப்பிரதேசத்தில் போஜ்பூரி மொழி என அனைத்தும் அழிந்து விட்டன. இந்தி திணிப்பு பல மொழிகளை கொன்று தின்றிருக்கிறது. தமிழ் எல்லா மதங்களையும் வரவேற்று வளர்ந்தது. சைவ சமயத்தில் தேவாரம், வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம், சமணத்தில் சிலப்பதிகாரம், பௌத்தத்தில் மணிமேகலை, கிறிஸ்துவத்தில் தேம்பாவணி, இஸ்லாமில் சீராப்புராணம் என தமிழ் தன்னை வளர்த்துக்கொண்டது. எந்த மதம் வந்தாலும் அதனுடன் இணைந்து வளரும் ஆற்றல் தமிழுக்குண்டு. தமிழர்கள் நாகரீக மற்றவர்கள் என்று நாடாளுமன்றத்தில் சொன்ன தர்மேந்திரபிரதான், மோடி தமிழர்க ளை அவமதித்தபோது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக தலைவர் முதலில் தமிழிலும் பின்னர் இந்தியிலும் கையெழுத்து வாங்குவோம் என்று ஒப்புக்கொண்டார். பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் இந்தியில் கையெழுத்திடும் நிலை வரும். தாய்மொழி விழி போன்றது, பிற மொழிகள் கைகளில் உள்ள வெளிச்சம் போன்றவை. காரல் மார்க்ஸ் ஜெர்மன் மொழி யில் மூலதனத்தை எழுதினார், ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் நாடகங்களை எழுதினார். நாம் இந்தியாவை நேசிப்பதால்தான் இந்தியை வேண்டாம் என்கிறோம்” என உரையாற்றினார்.
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில்,”ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்டக்குழு 191 நாட்கள் பணியாற்றி 18,826 பக்க அறிக்கை யை சமர்ப்பித்துள்ளது. இதை யாராலும் படித்து கருத்து சொல்ல முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அங்கீகரிக்கப்படுமானால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமம். அதே போன்று மக்கள் தொகை அடிப்படை யில் தொகுதி மறுவரையறை தென் மாநிலங்க ளின் தொகுதிகளைக் குறைத்து, வடமாநிலங்க ளின் தொகுதிகளை உயர்த்தும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்க ளின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே இத்திட்டங்களை பாஜக கொண்டு வருகிறது” என கூறினார்.
எம்.சின்னதுரை எம்எல்ஏ
கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை,”மும்மொழிக்கொள்கை பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற போது கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு குரல் எழுப்பினோம். அண்ணா நேருவிடம் அதிக மான மக்கள் பேசும் மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கருத்தை மறுத்தார். மூன்றா வது மொழியாக இந்தியை படி என்று திணிக்கி றார்கள். வளர்ச்சியடைந்த 4ஆவது நாடாக இந்தியா உள்ளது. மாநில அரசுகள் ஒத்து ழைக்க வேண்டும் என்று அமித் ஷாவும் மோடி யும் சொல்கிறார்கள். ஒன்றிய அரசை எதிர்த்து போராடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம். இது காட்டாட்சி” என பேசினார்.