tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கட்சியிலிருந்து நீக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியச்  செயலாளராக இருந்த டி.ஸ்ரீதர் மற்றும் கே.காந்தி ஆகியோர் கட்சி விரோத நடவ டிக்கை காரணமாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபரத்தை கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் : 60 ஆவது இடத்தில் சென்னை அரசு கல்லூரி

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் சிஇஓ வேர்ல்டு இதழில்  சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மருத்து வக் கல்லூரிகள் தரவரிசைப் படுத்தப்படு கின்றன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான 100 சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டி யல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 99.06 மதிப்பெண்கள் பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 22 ஆவது இடத்தில் 86.6  மதிப்பெண்களுடன் தில்லி எய்ம்ஸ்  கல்வி நிறுவனம், 46 ஆவது இடத்தில்  வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியும்,  55 ஆவது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவக் கல்லூரியும் உள்ளன.

 இந்தப்பட்டியலில் 78.77 மதிப்பெண்களுடன் சென்னை மருத்துவக்கல்லூரி (எம்எம்சி)  60 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 69  ஆவது இடத்தில் வாரணாசி பிஎச்யூ மருத்துவக் கல்லூரி உள்ளது.  “தமிழகத்தில் இருந்து பட்டியலில் இடம்பெற்ற ஒரே அரசு மருத்துவக் கல்லூரி,  சென்னை மருத்துவக் கல்லூரி மட்டுமே.

மும்மொழிக் கொள்கை திணிப்பு: அமைச்சர் பேட்டி

மும்மொழிக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் தரவுகளைக் கொண்டு அறிக்கை வெளி யிட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் தெரிவித்திருக் கிறார். சென்னையில் செய்தியா ளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறை வேற்றுவதற்காக ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய் யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூ.249 கோடி யையும், 2024-25 ஆம் ஆண்டுக் கான நிதி ரூ.2,152 கோடி யையும் ஒன்றிய அரசு விடு விக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கொடுத்த தரவுகளை வைத்து அறிக்கை வெளி யிட்டுள்ளேன். 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.  தமிழகத்திற்கு செயற் கையான நிதி நெருக்கடி தரும் செயலை ஒன்றிய அரசு செய்து வருகிறது. விரைவில் அதுகுறித்த அறிக்கை வெளியாகும்” என தெரிவித்தார்.