tamilnadu

img

வாழ்வில் உயர்வோம்!

வாழ்வில் உயர்வோம்!

உண்மை என்றும் உரைப்பாயே!  உலகம் வாழ்த்தச் சிறப்பாயே! எண்ணத் தூய்மை கொள்வாயே!  எவரும் போற்ற வெல்வாயே!  மடமை இருளை மாய்ப்பாயே!  மானுட நேயம் காப்பாயே! குடத்துள் விளக்காய் இருக்காமல்  குன்றின் ஒளியாய்த் திகழ்வாயே!   கற்றோர் நெஞ்சம் களிப்புறவே  கடமை நாளும் ஆற்றிடுவாய்! முற்றும் நம்மோர் பண்பாட்டை  முனைப்பாய்க் காத்து மகிழ்வாயே!  கேடுகள் செய்திட எண்ணாதே!  கீழ்மைப் போக்கினை விரும்பாதே! ஈடிலா நற்புகழ் எய்தியுமே  எதிலும் முதலிடம் வகிப்பாயே!  குறளின் கருத்துகள் உணர்வாயே!  கொள்கைத் தடத்தில் உயர்வாயே! அறத்தின் வழியில் நிற்பாயே!  அனைத்தும் விரும்பிக் கற்பாயே!