tamilnadu

img

சமூக நீதி கிடைக்கும் வரை இடதுசாரிகள் கைகளை உயர்த்துவோம்!

சமூக நீதி கிடைக்கும் வரை இடதுசாரிகள் கைகளை உயர்த்துவோம்!

அகில இந்திய மாநாட்டு விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் உ.வாசுகி சூளுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு விளக்க தெருமுனை பிரச் சார கூட்டம் மேற்கு 1 ஆம் பகுதி குழு சார்பில் சொக்கலிங்கநகர் மெயின் ரோட்டில் புதனன்று எஸ். ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. கிளைச் செயலாளர்கள் ஏ. பாக்கியராஜ், பி.நிருபன் சக்கர வர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.லெனின், பகுதிச் செயலாளர் பி. வீரமணி, மாவட்டக் குழு உறுப்பி னர் கு.கணேசன் ஆகியோர் கலந்து  கொண்டு பேசினர்.  மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி சிறப்புரையாற்றினார். அவர்  பேசியதாவது: மிக முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியா மக்க ளுக்கான நாடா? பெரிய பணக்காரர்  களுக்கு மட்டுமான நாடா? இந்த நாட்டின் உரிமை யாரு க்கு? உழைக்கும் மக்கள், மாண வர்கள், பெண்கள், சாதாரண மனி தர்களுக்கு இல்லை என்றால், இந்த  நாடு எதற்காக?  இந்த நாட்டில் உண்மையான போராளிகள் யார்? தூக்கு மேடை ஏறியவர்கள் கம்யூனிஸ்டுகள்; அடக்குமுறையை எதிர்கொண்டு சிறை சென்றவர்கள் கம்யூனிஸ்டு கள்; சித்ரவதை அனுபவித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால் இன்று மேடையில் போராட்டங்களைப் பற்றி பேசுபவர்  கள் யார்? போராட்டக் களத்தில் கோஷம்  கூட எழுப்பாதவர்கள் தான், போரா ட்டக் களத்தில் தடியடி, பொய் வழக்குகள் என சந்தித்தவர்களை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். “கம்யூனிஸ்டுகள் எங்க இருக்  காங்க?” என்று சீமான் கேட்கிறார்.

நாங்கள் இருந்தோம், இருக்கி றோம், இருக்கப் போகிறோம். நாங்  கள் போன இடங்களில், உங்களை எங்குமே காணவில்லையே! பொள்ளாச்சி கொடுமையில் யார் முதலில் நீதி கேட்டார்கள்? இந்திய மாணவர் சங்கம்; ஜன நாயக மாதர் சங்கம்; கம்யூனிஸ்ட்டு கள் மட்டுமேதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மோடியின் பாசிச ஆட்சி இந்தி யாவின் எதிரியாகும். வேலை வாய்ப்புகளை அழித்து, மக்களை தினக்கூலிக்கு தள்ளுவதும், தனி யார்மயமாக்கலும்தான் மோடி அர சின் திட்டங்கள்! “ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே  மொழி; ஒரே கலாச்சாரம்” இந்தி யாவின் பன்முகத்தன்மையை அழிக்கும் விஷயம். இன்று நாடா ளுமன்றத்தில் பாஜக ஆட்சியைக் கண்டிக்கக் கூடிய வல்லவர்கள் இடதுசாரிகள் மட்டும்தான். இந்தியை நம்மீது திணிக்கவிட மாட்டோம்; மதவெறி அரசியலை தடுக்கிறோம். ஆர்எஸ்எஸ், பாஜகவின் பாசி சத்துக்கு எதிராக ஒன்றாக குரல்  கொடுக்க வேண்டும்; மாணவர் களுக்கு இலவச கல்வி வேண்டும்;  பெண்களுக்கு பாதுகாப்பு வேண் டும்; ஏழைகள் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும். இதற்காக நாம் போராட வேண்டும். சமூக நீதி கிடைக்கும் வரை,  சமத்துவம் நிலவும் வரை, இடது சாரிகள் கைகளை உயர்த்துவோம். அதே நேரத்தில், நமது பொரு ளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு கள், விலைவாசி உயர்வு போன் றவை உழைப்பாளி மக்களை அச்ச மூட்டும் வகையில் உள்ளது. மக்கள்  பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு மாநாடாக  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 24வது அகில இந்திய  மாநாடு இருக்கும்.  ஜிஎஸ்டி இனிமேல் இருக்கக் கூடாது என்கிற நிலைமையை உரு வாக்க, நமது தாய் நாடு, நமது  தாய் மொழி, நமது கலாச்சாரம்; நமது பண்பாடு என்று பெரு மிதத்தோடு பீடுநடை போட அகில  இந்திய மாநாடு வெற்றி பெற வேண்  டும். இந்த மாநாட்டை நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலப்பட வேண்டும். நாங்கள் முன் வைக்கிற இடதுசாரி அரசியல் பக்  கம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதுதான் நமது பிரச்ச னைக்கான தீர்வு; அதுதான் இந்திய  நாட்டுக்கு ஒரு விடுதலையை தேடி  தரும் என்று பேசினார்.