tamilnadu

‘பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருப்போம்’

சென்னை,ஜன.15- ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி  14 மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற ஆண் மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணி புரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடர்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை  உறுதி செய்ய போதுமான  நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள்  வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவை யான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.