tamilnadu

img

அரசியலமைப்பைக் காப்போம்... வக்பு சட்டத்தை திரும்பப் பெறுக!

அரசியலமைப்பைக் காப்போம்... வக்பு சட்டத்தை திரும்பப் பெறுக!

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் அரசியலமைப்பின் மீதான தாக்குதலை தடுக்கக் கோரியும், வக்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவரும், குல்பர்கா சட்டமன்ற உறுப்பினருமான கனீஸ் பாத்திமா, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. நீலா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.