tamilnadu

img

ல உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்போம்!

ல உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய 24 ஆவது மாநாடு மதுரை யில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற  உள்ளது. இதையொட்டி மக்கள் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் மீது  25 தலைப்புகளில் தமிழ்நாடு முழுவதும்  கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அதனொரு பகுதியாக, திருநெல்வேலி யில் செவ்வாயன்று ‘நில உரிமைக்கான மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான விஜு கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.  அதில் அவர் பேசியதாவது: உழுபவனுக்கு நிலம் என்கிற கோரிக்  கையை விடுதலைப்போராட்டக் காலத்தி லேயே கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1930- களில் இருந்து இதற்கான போராட்டங் கள் நடந்து வருகின்றன.  மிருகங்கள் பெயரில் எழுதிவைக்கப்பட்ட நிலங்கள் நாடு விடுதலை அடைந்த பிறகும்,  நிலத்திற்கான மிகப்பெரிய போராட்டங் கள் தமிழ்நாடு, கேரளம், அசாம், பஞ்சாப்  என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்  நடந்தன. இதனால், ஆளும் வர்க்கமா னது ‘நிலச் சீர்திருத்தம்’ என்கிற பெய ரில் சட்டப்பூர்வ நில உச்சவரம்பை கொண்டு வந்தது. ஆனால், ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக என்ன நடந்தது என்று பார்த்தால் நிலப்பிரபுக்களுக்கு 1950-களில் 690 கோடி ரூபாய் இழப்பீ டாக வழங்கப்பட்டது. பல்வேறு இடங்க ளில் நில உடமையாளர்கள் தங்களது வளர்ப்பு மிருகங்கள் பெயரில் நிலங் களை எழுதி வைத்தனர். நிலத்துக்கான தொடர் போராட்டம் நடந்து வந்த பின்னணியில் கேரளத்தில்  கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது.  1957-இல் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலை மையிலான அரசு பொறுப்புக்கு வந்த நான்காவது நாள் கேரளம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்களையும் குத்த கைதாரர்களையும் நிலவெளியேற்றம் செய்வதை தடை செய்தது. அதன் தொட ர்ச்சியாக உபரி நிலங்களை அவர் களுக்கு சொந்தமாக்கியது. அதன் மூலம் 35 லட்சம் மக்களுக்கு சொந்தமாக நிலம்  கிடைத்தது. ஜம்மு - காஷ்மீரில் ஜமீன்  தாரி முறை ஒழிக்கப்பட்டு நில உச்சவரம்  பாக 22 ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு நில விநியோகம் செய்யப் பட்டது. நில விநியோகம் செய்த இடதுசாரி அரசுகள்    

 இந்தியாவின் புகழ்பெற்ற பொருளா தார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலா னோபிஸ் இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், ஜம்மு- காஷ்மீர் தவிர கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் இடதுசாரி அரசுகள்  மட்டுமே நில விநியோகம் செய்தன. இதில்  மேற்கு வங்க அரசு மட்டும் நாட்டின் ஒட்டு மொத்த நில விநியோகத்தில் 50 சதவிகி தத்தை மேற்கொண்டது நில உரிமை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் - பழங்குடி மற்றும் ஏழைகளாவர். ஒடிசாவில் 75 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 36 லட்சம் நிலமற்றவர்கள் உள்ளனர். நில விநியோகச்சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் செயல் பீகாரில் 23 லட்சம் ஏக்கர் உபரி நிலம்  இருப்ப தையும் நிலமற்றோருக்கு தலா ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் விநியோகத்திற்கு தயாராக இருப்பதாகவும் பந்தோபாத்யாயா கமிஷன் கண்டறிந்தது. ஆனால் நில  விநியோகம் நடக்கவில்லை. கர்நாடகாவில் லட்சக்க ணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்வோருக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஆந்திரா, தெலுங்கானாவில் கோனேரி ரங்காராவ் கமிஷன் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் உபரியாக உள்ளதை கண்டறிந் தது.  ஆனால், ஏழைகளுக்கு நிலம் கொடுப்பதற்கு பதிலாக நில விநியோக சட் டத்தை நீர்த்துப்போகும் செய லையே முதலாளித்துவ கட்சிகள் செய்து வருகின்றன. இடதுசாரி அரசுகள் மட்டுமே நில விநியோகம் செய்துள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்கும் மடங் களுக்கும் சொந்தமாக உள்ளன. தமிழ்நாட்டில் 4.78 லட்சம் ஏக்கர் உட்பட ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்கு சொந்தமாக உள்ளன. பூரி ஜெகநாதர் ஆலயத்துக்கு 61 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இப்படி நாடு முழுவதும் ஆலயங்களுக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி ஏக்கர் நிலம் உள்ளதாக மதிப்பீடு செய்யலாம். இதுபோல் இந்தியா முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமாக 9.4 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.  இப்படி பல்வேறு மதங்களுக்கும் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. விநியோ கத்துக்கான நிலங் கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை உறுதிப்படுத்தும் போராட்டங்களை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.