tamilnadu

img

கேரள மாநில மாநாட்டு முடிவுகள் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும்!

கேரள மாநில மாநாட்டு முடிவுகள் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும்!

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில 24-ஆவது மாநாட்டின் நிறைவு விழாவில், கொல்லம் ஆசிரம மைதானத்தில் கூடியிருந்த பெரும் கூட்டம் கட்சியின் வலிமையைக் காட்டு கிறது” என்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முதலமைச்சருமான பின ராயி விஜயன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது  சரியான நடவடிக்கைகளின் ஒரு பகுதி யாக கேரளத்தில் கட்சியை அதிக வலி மைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர்  கூறினார். கேரள மாநில மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் பினராயி விஜயன் மேலும்  பேசுகையில், இந்த மாநாடு முக்கிய மாக கட்சியின் வளர்ச்சியைப் பற்றி விவா தித்ததாகவும், புதிய தலைமையின் பணி அதிக மக்கள் ஆதரவைப் பெறுவதில் நேர்மறையான முடிவுகளைத் தரும் என்றும் அவர் கூறினார்.  “கேரளத்தில் தொடர்ச்சியான ஆட்சி துவங்கியபோது கடந்த மாநாடு நடைபெற்றது.

அன்று அந்த மாநாடு புதிய  கேரளத்தை உருவாக்குவதற்கான ஆவ ணத்தை அங்கீகரித்தது, பின்னர் இடது  ஜனநாயக முன்னணி அந்த ஆவணத்தை விவாதித்து ஏற்றுக் கொண்டது. புதிய கேரளத்தின் உருவாக்கம் சரியான திசை யில் செல்கிறது என்று இந்த மாநாடு மதிப்  பிட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்கள் கேரளத் திற்கு பெரும் நெருக்கடியான காலமா கும். கேரளத்தை விரோதப் போக்கோடு  நடத்துவதும், ஒரு மாநிலம் என்ற வகை யில், தேவையான உதவிகளை வழங்காத ஒன்றிய அரசின் நிலைப்பாடும் மாநி லத்தையே மூச்சுத் திணறச் செய்துள்ளது.  மாநிலத்தின் வளத் திறனில் ஒரு பகுதி யை ஒன்றிய அரசு வழங்குகிறது, இதர  பகுதிக்காக மாநில அரசு கடன் வாங்கு கிறது. இந்த இரண்டையும் ஒன்றிய அரசு மட்டுப்படுத்துகிறது. கடன் வரம்பைக் குறைத்துள்ளது. கேரள அரசு தன்  சொந்த வருவாயை அதிகரித்ததால் தான்  திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற  நிலைக்கு மாநிலத்தை ஒன்றிய அரசு தள்ளியிருக்கிறது. மிகவும் நியாயமானவற்றில் கூட  ஒன்றிய அரசு உதவி வழங்குவதில்லை.

பிற மாநிலங்களில் ஏற்பட்ட பேரிடர் களுக்கு நிதியுதவி அறிவிக்கும், வய நாடு சூரல்மலை பேரழிவு உட்பட கேர ளத்திற்கு மட்டும் நிதியுதவி வழங்குவ தாக இல்லை. வயநாடு ஒரு பேரழிவாகக் கருதப்பட்டாலும், உதவுவதற்கு ஒன்றிய அரசு முன்வரவில்லை” என்று பினராயி விஜயன் தனது உரையில் கூறினார்.    “புலம்பெயர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் தங்கள் வருமானத்தை தங்கள்  குடும்பங்களுக்கு மட்டுமன்றி, கேர ளத்திற்கும் பயன்படுத்துகின்றனர்; கொச்சியில் நடைபெற்ற கேரள முதலீட்டா ளர்கள் உச்சி மாநாடு கேரளத்  தொழில்  துறை வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும்” என்ப தையும் பினராயி விஜயன் குறிப்பாக எடுத்  துரைத்தார்.