அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் திருப்போரூர் கந்தசாமி கோவில் நிர்வாகம்!
மக்களுக்கு பட்டா கிடைக்க அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்போரூர் பேரூராட்சியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா எண் ஒன்றை ரத்து செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா விடுத்துள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வருவாய் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் 375 ஏக்கருக்கும் மேலான நிலங்களில் விவசாயம் செய்தும், வீடுகள் கட்டியும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலங்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எஸ்டேட் கிராமமாகும். இந்த கிராமத்தில் மிராசுதாரராக கந்தசாமி என்பவர் இருந்துள்ளார். கிராம விவசாயிகள் அனைவரும் ரயத்துக்கான பட்டா பெற்று சுதந்திரமாக தங்களின் நிலங்களின் வரிகளை செலுத்தி ஆண்டு அனுபவித்து வந்துள்ளனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் படிப்படியாக எஸ்டேட் அபாலிஷன் சட்டங்களின் கீழ் எஸ்டேட் முறைகளின் உரிமைகள் ரத்து செய்யப்பட்டு இரயத்துக்களே நிலத்தின் முழு உரிமை நிலையை அடைந்துள்ளனர். மேற்கண்ட நிலங்களில் உரிமை யாளர்களான விவசாயிகள் இந்த நிலத்தில் முழு பாத்தியத்தை பெற்ற உரிமையாளர்களாவார்கள். இந்நிலங்களில் தமிழக நில உடைமை பதிவு மேம்பாட்டு திட்டம் நடைபெற்ற காலத்தில் (1985) மேற்கண்ட பட்டா தாரர்களான விவசாயிகளுக்கு எதிராக, காலாவதியான மிராசுதாரர் பட்டாவை முறைகேடாக வருவாய்துறை யிடம் உண்மைக்கு மாறான தகவல் களை சொல்லி யூடியாரில் பட்டா பெற்றுள்ளார்கள். அதுவரை பூரண சுதந்திரத்துடன் அனுபவித்து வந்த விவசாயிகளிடம் 1987-ல் கோயில் நிர்வாகம் இந்த நிலங்கள் தங்களு டையது என்றும் மூன்று விவசாயிகள் மீது செங்கல்பட்டு உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் நீதியரசர் இந்த கிராமம் எஸ்டேட் கிராமம் என்றும், இந்த நிலங்களின் உரிமையாளர் விவ சாயிகள் தான் என்றும் கோவில் நிர்வாகம் உரிமை கோர தகுதி யில்லை என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் இதைத் தொடர்ந்து கந்தசாமி கோயில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தார்கள். அங்கு நடைபெற்ற விசாரணையில் நீதியரசர் விவசாயிகளின் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் இந்த நிலங்களை கோயிலுக்கு சொந்த மான நிலங்கள் என தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து மூன்று விவசாயி கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கினை கவனமாக விசாரித்த நீதியரசர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சரியான முறையில் விசாரணை செய்யப்படவில்லை என்பதை பதிவு செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். மேலும் விசாரணையில் சமர்ப்பித்த ஆவணத்தில் பட்டா எண் 1-ல் சிங்கார வேலு முதலி பெயர் இடம் பெற்றுள்ளது என்றும், பட்டா எண் 1-ன் தன்மை என்ன என்றும், மிராசுதாரருக்கு உள்ள உரிமை என்ன என்றும் கேள்விகளை எழுப்பி வழக்கை மறு விசாரணை செய்ய சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வழக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வழக்கினை தொடர்ந்து நடத்திட ஏழை விவசாயி களிடத்தில் போதிய பொருளாதார வசதி இல்லாததால் வழக்கை நிலுவையில் தொடர்ந்தது. மேலும் திருப்போரூர் கிராமத்தில் நில உரிமையாளர்களான விவசாயி கள் ஜி.பாலாஜி, கமலஹாசன் ஆகிய இருவர் தங்கள் நிலங்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தரக் கோரி 2017-ஆம் ஆண்டு மனு கொடுத்த னர். இதனை கோயில் நிர்வாகம் எப்படி யாவது அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெகநாதன் என்பவரை மறைமுகமாக நிய மித்து, திட்டமிட்டுபொதுநல வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள 1-ம் நெம்பர் பட்டா வழக்கை நீதி மன்றத்தில் மறைத்து, சூழ்ச்சி செய்து, மோசடியாக பெறப்பட்ட அனைத்து சர்வே எண்களின் நிலங்களை கையகப்படுத்திட உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளார்கள். விவசாயிகள் மற்றும் குடியிருப் போர் பெயரில் உள்ள ஆவணங்களை யும் மற்றும் கள ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி, மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தை வலி யுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து விசாரணை செய்து விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவ ணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் 294 நில உரிமையாளர்கள் 1000-க்கணக்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதன் மீதான விசாரணை முடிவுற்று இது நாள் வரை அறிக்கை வழங்கவில்லை. மேலும் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பிரதிநிதி, கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். அதில் எக்காலத்திலும் கந்தசாமி கோயிலுக்கு இந்நிலங்கள் சொந்தமானதல்ல என்பதற்கு சாட்சியாக 1772-ஆம் ஆண்டு முதல் உள்ள, சுமார் 25-க்கும் மேற்பட்ட சட்டப்படி நிலையான அரசு ஆவ ணங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும் இந்நிலங்கள் எந்த நூற்றாண்டிலும் கந்தசாமி கோயிலுக்கு இனாமாகவோ, தான மாகவோ வழங்கப்படவில்லை. அதற்கு ஆதாரமாக ஆர் எஸ் ஆர் பதிவேட்டில் டி டி .எண்களுடன் வழங்கப்பட்ட நிலங்கள் மட்டுமே கந்தசாமி கோயில் சார்ந்த மற்றும் கிராம ஊழியத்திற்கான இனாமாக வழங்கப்பட்ட நிலங்களாகும். கிராம விவசாயிகள் கூறும் நிலங்கள் அரசின் வகைப்பாட்டின் கீழ் உள்ள இரயத்துவாரி நிலங்கள் என்று எடுத்துரைத்தார்கள். விசாரணை முடிவுற்று, விவசாயிகளுக்கு விசா ரணை அறிக்கை வழங்குகிறார். அதில் விவசாயிகள் சமர்ப்பித்த அரசு ஆவணங்கள் மற்றும் பதிவு செய்துள்ள பத்திரங்கள் இந்நாள் வரை தொடர்ந்து விவசாயம் செய்து வருதல், கந்தசாமி கோயிலுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புரைகள், மற்றும் எண்ணற்ற ஆவணங்களை எவ்வித ஆவண ஆய்வு செய்யப்படாமல் கந்தசாமி கோயிலுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே கொடுத்துள்ளார். ஏழை விவ சாயிகள் மாவட்ட நிர்வாக நீதி மன்றத்தை முழுவதுமாக நம்பி இருந்த னர். ஆனால் மாவட்ட ஆட்சியரகம் கோவிலுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக நடக்கும் போக்கு விவ சாயிகளின் மத்தியில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழக அரசிற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழக அரசு திருப்போரூர் கிராமத்தின் ஆவ ணங்களையும் சுமார் 140 ஆண்டுக ளுக்கு மேலாக நில உரிமையாளர் கள் பதிவு செய்துள்ள பத்திரங்களை யும் ஆய்வு செய்து, கள ஆய்வு செய்து விவசாயிகள் மற்றும் குடி யிருப்போருக்கு சொந்தமான நிலங்க ளில், கந்தசாமி கோயில் பெயரில் நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள பட்டா எண்.1-னை ரத்து செய்து, விவசாயிகள் மற்றும் குடி யிருப்போர் பெயரில் பட்டா வழங்கிட வேண்டுமாய் சிபிஎம் செங்கல்பட்டு மாவட்டக் குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.