tamilnadu

img

சகஜானந்தா மணிமண்டபம் குளத்தை சீரமைத்த என்எல்சி நிர்வாகம்

சகஜானந்தா மணிமண்டபம் குளத்தை 
சீரமைத்த என்எல்சி நிர்வாகம்

சிதம்பரத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் உள்ள குளம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.  என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதி ரூ. 50 லட்சத்தில் குளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். நான்கு புறமும் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகை யில் சிமெண்ட் கற்கள் பதித்த நவீனப் படுத்தி உள்ளது. இந்த குளத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த என்எல்சி நிறுவன தலை வர் பிரசன்னகுமார், மோட்டுப்பள்ளி கல்வெட்டையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் என்எல்சியின் மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரப், சுரங்கத்துறை இயக்குநர் சுரேந்திர சந்திர சுமன், மின் துறை இயக்குநர் வெங்கடாசலம், செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ், சகஜானந்தா மணி மண்டபம் ஒருங்கிணைப்பாளர் பாலையா, சுவாமி ஏ.எஸ் சகஜானந்தர் பணிநிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், என்எல்சி அதிகாரி கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் நிறுத்தும் இடத்தில் தேருக்கு ரூ 67.45 லட்சம் செலவில் ஷெட்டர் அமைக்கப்பட்டது. இதனையும் கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் கீழ வீதி தேர் நிறுத்தும் இடத்திற்கு அருகே நடைபெற்றது. இதில் கோயில் தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், முன்னாள் செய லாளர் சிவராமன் உள்ளிட்ட என்எல்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.