பெஞ்சால் புயலால் அரகண்டநல்லூரில் பாதிக்கப்பட்ட 95 குடும்பங்களுக்கு வீடு
மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
பெஞ்சால் புயலால் அரகண்டநல்லூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு மனை மற்றும் வீடு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். 2024 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பெஞ்சால் புயல், மழை, வெள்ளத்தில் விழுப்பு ரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலி ருந்து மீள முடியாமல் பெரும் அவதிக்குள்ளா கியுள்ளனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பேரிடர் கால உதவிகள் சிறப்பாக செய்து கொடுத்தது. ஆனால், சாக்கு தைக்கும் தொழி லாளர்கள், மூட்டை தூக்கும் தொழி லாளர்கள், தலைசுமை, சிறு தெரு ஓர வியாபாரம் செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என 23 குடும்பத்தினர் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த நிலையில் உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பற்ற வகையில் வாழ முடியாத சூழ்நிலையில் பரிதவித்து வருகின்றனர். மேலும், அன்றாடம் வாழ்க்கையை நகர்த்துவதற்கு கூட வழி இல்லாமல் அல்லல் படுகிறார்கள். சொந்த வீடும் வீட்டு மனையும் வாங்க முடியாமல், வாடகை வீடுகளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில், 72 குடும்பங்கள் முழுமையாக உடமையை இழந்துள்ளது. இந்த குடும்பங்களுக்கு இலவசமாக வீடு மனை கொடுத்தால், பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்ட 95 குடும்பங்களுக்கு அரசின் இலவச வீடு, வீட்டுமனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரகண்டநல்லூர் நகரச் செயலாளர் ஏ.ஆர்.கே தமிழ்ச்செல்வன், வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.முத்துவேல் ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்ட பாதிக்கப்பட்ட மக்கள், மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.