தில்லி தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான ஞாயிறன்று ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் முதல்வரு மான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தை கடுமையாகசாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையம் பாஜகவிடம் சர ணடைந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறு கிறார். ஓய்வுக்குப் பின்பு அவருக்கு என்ன மாதிரியான பதவிகள் வழங்கப்படும்? ஆளுநர் பதவியா?” என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் விமர்ச னத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத் தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொ ன்றில், “தில்லி தேர்தலை மையமாக வைத்து 3 பேர் கொண்ட ஆணையம் மீது அவதூறு பரப்பும் விதத்தில் தொடர்ச்சி யாக விமர்சனங்கள் சுமத்தப்படுவதை உற்று நோக்கி வருகிறோம்.
அவதூறு விமர்சனங்களால் திசை மாறாமல், அரசியலமைப்பு வரம்புக்கு கட்டுப்பட்டு செயலாற்றி வருகிறது. தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளன. தில்லி தேர்தலையொட்டி அரசியல் கட்சி களாலும் வேட்பாளர்களாலும் எழுப்பப் பட்டுள்ள புகார்கள் மீது ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளால் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நியாயமான முறையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.