tamilnadu

img

ஆளுநர் ரவி திடீர் தில்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவரது பதவிக்காலம் முடிந்து விட்ட  நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்பட வில்லை. ஆனால், அவர் தொடர்ந்து ஆளுந ராக நடித்துக் கொண்டிருக்கிறார். விதிகள்படி  புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை, ஏற்கெ னவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால் அவர் ஆளுநராக நீடிக்கிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திங்களன்று (பிப்.3) மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம்  மூலம் தில்லி சென்றார். அவர், தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிப்.5 அன்று மாலை 4.20 மணிக்கு தில்லி யில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பு வார் என கூறப்படுகிறது.

35 அதிகாரிகள் நியமனம்

சென்னை: பொதுத் தேர்வுக்கான  பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரி யாக, 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பள்ளிக்  கல்வித் துறையின் மூத்த இயக்குநர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்க  உள்ள நிலையில், தேர்வுப் பணிகளை கவனிக்க 35 அதி காரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு கிழக்கு: இன்று இடைத்தேர்தல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்.5 அன்று நடைபெற உள்ளது. இதற்கான முன் னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலு வலர் ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 9  வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1500 போலீசார், 3  கம்பெனி சிஐஎஸ்எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சித்தோடு  பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்,  ஸ்ட்ராங் ரூம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலை யத்துக்கு 237 பயணிகளுடன் செவ்வாயன்று  அதிகாலை வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், தீவிர  சோதனை நடத்தப்பட்டது. அதில், வெடிபொருட்கள் எது வுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீ சார் வழக்குப் பதிந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

நெய்வேலி என்.எல்.சியில் உள்ள மருத்துவமனைக்கு தபால் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள னர். என்.எல்.சி. மருத்துவமனைக்கு மிரட்டல் விடுக்கப் பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி  வருகின்றனர்.

சென்னையில் கடும் பனிமூட்டம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாயன்று அதிகாலை கடும்  பனிமூட்டம் நிலவியது. இதனால் செங்கல் பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக சென்ற அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை விமான நிலை யத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க  முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதரா பாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், தில்லி, மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதி களுக்கு புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள்  தாமதமாக இயக்கப்பட்டன. 

பழைய பேருந்து நிலையங்களை மறுசீரமைக்க திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 மாநகராட்சி களில் உள்ள பழைய பேருந்து நிலை யங்களை மறு சீரமைக்க அரசு திட்டம்  வகுத்துள்ளது. ரூ.2 கோடி செலவில் விரி வான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாமக்கல், திருச்சி, ஈரோடு, ஒசூர், திரு வண்ணாமலை மாவட்டங்களில் பழைய பேருந்து  நிலையங்களை மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.