tamilnadu

img

மூத்த தோழர் ஏ.கோதண்டம் மகன் உடலுக்கு கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

 விழுப்புரம்,நவ.2- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவரும் அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான தோழர் ஏ.கோதண்டத்தின் இளைய மகன் கோ.அசோக்குமார் அக்டோ பர் 31 அன்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக திண்டிவனம் காந்தி நகரில் உள்ள  இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை (நவ.2) அன்று மாலை அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் திமுக செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, அதிமுக சி.வி.சண்முகம் எம்பி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எம்பி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேது நாதன், மாசிலாமணி, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், வழக்கறிஞர் சங்க மாநில நிர்வாகி முத்து அமுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் விழுப்புரம் என்.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சலவாதி ரோட்டில் உள்ள திண்டிவனம் நகராட்சி மின் தகன மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.